சட்டைப் பையில் அடங்கும் அழகிய Fujifilm கேமிரா!

ஜப்பானை மையமாக கொண்டு இயஙுகும் பிரபல கேமிரா நிறுவனமான Fujifilm ஆனது முதன்முறையாக சதுர வடிவ கேமிராவினை அறிமுகம் செய்துள்ளது!

Updated: May 15, 2018, 02:37 PM IST
சட்டைப் பையில் அடங்கும் அழகிய Fujifilm கேமிரா!

ஜப்பானை மையமாக கொண்டு இயஙுகும் பிரபல கேமிரா நிறுவனமான Fujifilm ஆனது முதன்முறையாக சதுர வடிவ கேமிராவினை அறிமுகம் செய்துள்ளது!

கேமிரா நிறுவனங்களில் தனக்கென தனியோர் அடையாளத்தினை தக்கவைத்துக்கொண்டு இருக்கும் Fujifilm நிறுவனம் தனத அடுத்தப் படைப்பான Instax Square SQ6-னை அறிமுகம் செய்துள்ளது.

சதுர வடிவில் இருக்கும் இந்த கேமிராவானது 1:1 என்ற விகிதாச்சாரத்தில் உள்ளது. மேலும் இந்த கேமிரா மூலம் 2.4" x 2.4" சதுர வடிவில் போட்டக்களை வழக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனலாக் முறையில் இயங்கும் இந்த கேமிராவில், பயனருக்கு தேவையான மேனுவல் கட்டமைப்பு வசதிகள் இல்லை. மாறாக ஆட்டோ எக்ஸ்போசர் முறைப்படி தானாகவே புகைப்படங்களை எடுக்கும் திறன் படைத்தது.

இந்த கேமிரா மூலம் செல்பி புகைப்படங்களையும் எடுக்கலாம். அதற்கு ஏற்றவாறு ப்ரைட்னஸ் வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக பிரத்தியேகமாக சேர்க்கப்பட்டுள்ள மேக்ரோ மோட் அமைப்பின் மூலம் 12" வரையில் அருகாமை புகைப்படங்களை எடுக்க இயலும்.

இத்தனை சிறப்பம்சங்களுடன் வெளிவரும் இந்த Instax Square SQ6-ன் விலை $279 ஆகும். இந்திய மதிப்பில் ரூ.18726.60 ஆகும். இந்த கேமிராவில் பயன்படுத்தக்கூடிய பிலிம்களை தனியாக வாங்க வேண்டும். இதன் ஒரு சுருளின் விலை $12.54 (இந்திய மதிப்பில் ரூ.850 ஆகும்). ஒரு சுருளில் 10 புகைப்படங்களை எடுக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது!