உத்தரபிரதேசத்தில் உள்ள கோட்வாலி என்ற இடத்தில் ஒரு வேடிக்கையான சம்பவம் நடைபெற்றுள்ளது. விஜய் வர்மா என்ற நபர் தனது உருளைக்கிழங்கை யாரோ திருடிவிட்டதாக நினைத்து போலீஸை அழைத்துள்ளார். போலீஸார் அங்கு சென்று பார்த்தபோது, வெறும் 250 கிராம் உருளைக்கிழங்கை காணவில்லை என்பது தெரிய வந்துள்ளது. இந்த வழக்கை அறிந்துகொள்ள ஆர்வமாக உள்ள போலீசார் அதை விசாரிக்க தொடங்கினர். சமைப்பதற்காக உருளைக்கிழங்கை ஒதுக்கி வைத்ததாகவும், திரும்பி வந்து பார்த்தபோது அவை திருடு போய்விட்டதாகவும் விஜய் விளக்கி உள்ளார். அதனை யார் எடுத்து கொண்டு போய் இருப்பார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று போலீசார் அவரிடம் கேட்டபோது, காவல்துறையால் தான் அதனை கண்டுபிடிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான வீடியோவும் வெளியாகி அனைவருக்கும் சிரிப்பு மற்றும் நகைச்சுவையான கருத்துகளுக்கு வழிவகுத்தது. அந்த வீடியோவில், போலீஸ் அதிகாரிகள் என்ன நடந்தது என்று தீவிரமாக விசாரிப்பது தெரிகிறது. ஆனால் உண்மையான பிரச்சினை உருளைக்கிழங்கு இல்லை என்பதும், அந்த நபர் மது அருந்தியதும் தெரிய வந்தது. இருப்பினும் போலீசார் விசாரணையை தொடங்கினர். “ஆமாம், வேலையில் நீண்ட நாள் கழித்து நான் குடித்தேன், ஆனால் அது முக்கியமில்லை. காணாமல் போன உருளைக்கிழங்கைக் கண்டுபிடிக்க வேண்டும்,'' என்று அவர் தெரிவித்துள்ளார்.
Vijay Verma of Hardoi, UP called the police after 250 grams of potatoes were stolen.
pic.twitter.com/wjqAMbPVFw— Ghar Ke Kalesh (@gharkekalesh) November 1, 2024
250 கிராம் உருளைக்கிழங்கு எப்படி இவ்வளவு சீரியஸாக எடுத்துக் கொள்ளப்படுகிறது என்று சமூகவலைத்தளங்களில் பலர் கேலி செய்து வருகின்றனர். இது உருளைக்கிழங்கை மிகவும் மதிப்புமிக்க ஒன்றாக மாற்றுகிறது. புதையல் காணாமல் போனது போல போலீசார் இதனை விசாரிப்பது வேடிக்கையாக உள்ளது என்று ஒருவர் தெரிவித்துள்ளார். மற்றொரு பயனர், "நல்லவேளை அவர் வைத்திருந்த மதுபானம் காணாமல் போகவில்லை. இல்லை என்றால் அவர் ராணுவத்தை அழைத்து இருப்பார்" என்று பதிவிட்டுள்ளார். இன்னொரு பயனர் "காவல்துறை நமது மக்களின் சேவகர்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் படிக்க | உண்மையான இந்து ரெபேக்கா வர்கீஸ் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ