Virat Kohli Life Advice : உலகளவில் அதிகம் பேரால் கொண்டாடப்படும் கிரிக்கெட் விளையாட்டு வீரர்களுள் ஒருவர், விராட் கோலி. இவர் தன் வாழ்நாளில் எத்தனை பேரால் கொண்டாடப்படுகிறாரோ அதைவிட அதிகம் நபர்களால் வெறுக்கவும் படுகிறார். பல கடினமான தருணங்களை கடந்து வந்துள்ள விராட் கோலி தன் வாழ்க்கையில் இருந்து கற்றுக் கொண்ட சில பாடங்களை தனது ரசிகர்களுக்கும் தன்னை சேர்ந்தவர்களுக்கும் கொடுத்திருக்கிறார். அவை என்னன்னு தெரியுமா?
சுயத்தை மாற்றிக் கொள்ளாமல் இருத்தல்:
பலர் பிறர் தன்னை மதிக்க வேண்டும் அல்லது விரும்ப வேண்டும் என்பதற்காக தனது சுயத்தை மாற்றிக்கொள்ள நினைப்பர். இதனால் தன்னைத்தானே பல சமயங்களில் இழந்து விடுவர். இது குறித்து பேசும் விராட், தனக்கு வேறு யார் போலவும் நடிக்க பிடிக்காது என கூறியிருக்கிறார். மேலும் தன்னைப் பிடித்தவர்கள் தனது அனைத்து குணாதிசயங்களையும் விரும்புவதாகவும் அது தனக்கு பிடித்திருப்பதாகவும் சில இடங்களில் கூறியிருக்கிறார்.
இறை நம்பிக்கை குறித்து..
இந்த உலகில் வாழும் பலருக்கு இறைவன் என்று ஒருவர் இருக்கிறாரா, அது வெறும் மாயை தானா என பல்வேறு கேள்விகள் இருக்கின்றன. இதற்கு விராட் கோலி கொடுக்கும் பதில் தெளிவாக இல்லை என்றாலும் ஓரளவுக்கு புரிதலுடன் இருக்கிறது.
“எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறது, ஆனால் எப்போதும் என்னை நீங்கள் கோவிலின் அருகில் பார்க்க மாட்டீர்கள். நான் தன்னை அறிதல் முறையை நம்புகிறேன். எனக்கு அமைதியான மனநிலை மிகவும் முக்கியம். பிடிக்காமல் ஒரு விஷயத்தை செய்வதில் என்ன பயன் இருக்கிறது? என்னை மாற்றாமல் எந்த ஒரு விஷயம் எனக்கு பிடித்தார் போல் இருக்கிறதோ அதை செய்வதை எனக்கு பிடிக்கும்” என்று அவர் ஒரு நேர்காணலில் பேசியிருக்கிறார்.
கடின உழைப்பு:
வாழ்வில் ஒரு எட்டாக்கனியை அடைய நமக்கு இரண்டு விஷயங்கள் மிகவும் முக்கியமானவர்களாக இருக்கின்றன. அதில் ஒன்று தன்னைத்தானே நம்புவது இன்னொன்று கடின உழைப்பு. நம் பலம் இது பலவீனம் எது என்று தெரிந்து கொண்டு பலத்தை மேம்படுத்துவதிலும் பலவீனத்தை பலமாக மாற்றுவதிலும் சக்தி அடங்கி இருக்கிறது. நீங்கள் தினமும் உங்கள் முகத்தை கண்ணாடியில் பார்க்கும்போது நீங்கள் என்ன பார்க்கிறீர்களோ அது உங்களுக்கு பிடித்ததாக இருக்க வேண்டும்.
உங்களுக்குள் திறமை இருக்கிறதோ இல்லையோ கடின உழைப்போடு வாழ்வில் போராடிக் கொண்டே இருக்க வேண்டும். அந்த உழைப்பு எப்போதும் வீண் போகாது இன்று விராட் கோலி சில நேர்காணல்களில் தெரிவித்திருக்கிறார்.
முழு மனதுடன் ஈடுபாடு:
வாழ்வில் என்ன செய்ய விரும்பினாலும் அதை முழு மனதுடன் செய்ய வேண்டியது நம் கடமை. வேறு எந்த கவனச் சிதறலிலும் மனதை ஈடுபடுத்தாமல் உங்கள் மனதிற்கு உண்மையாக இருந்து வெற்றியை நோக்கி ஓட வேண்டும். உடலை கச்சிதமாக வைத்திருப்பது உங்களுக்கு ஒரு வித தன்னம்பிக்கையை கொடுக்கும். எனவே அதிலும் கவனம் செலுத்துவது நல்லது, என்கிறார் விராட் கோலி.
கோபம்:
விளையாட்டின் போது பல சமயங்களில் கோபத்தை காண்பிப்பது எனக்கு வெறித்தனமாக விளையாட உதவியுள்ளது. அதே சமயத்தில் ஆண்டுகள் செல்ல செல்ல அந்த கோபத்தை கட்டுப்படுத்துவதால் ஏற்படும் நல்ல விளைவுகளை பார்க்கத் தொடங்கினேன். அதனால் தேவைப்படும் நேரங்களில் மட்டும் கோபப்பட்டு பிற நேரங்களில் அதை கட்டுப்படுத்துவது மிகவும் நல்லது.