கர்நாடக அமைச்சரவையில் யாருக்கு எந்த பதவி!

கர்நாட்டகாவின் புதிய முதல்வராக வரும் புதன் அன்று பதவியேற்கவுள்ள குமாரசுவாமி அவர்கள் இன்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி அவர்களை சந்திக்கின்றார்!

Updated: May 21, 2018, 04:02 PM IST
கர்நாடக அமைச்சரவையில் யாருக்கு எந்த பதவி!

கர்நாட்டகாவின் புதிய முதல்வராக வரும் புதன் அன்று பதவியேற்கவுள்ள குமாரசுவாமி அவர்கள் இன்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி அவர்களை சந்திக்கின்றார்!

இச்சந்திப்பின் போது கர்நாட்டக அமைச்சரைவையில் யாருக்கு எந்த பதவி அளிப்பது என்பது குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இச்சந்திப்பிற்கு பின்னர் அமைச்சரவை பதவி குறித்து தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.

நடந்து முடிந்த கர்நாட்டக சட்டமன்ற தேர்தலில் பாஜக 104 தொகுதிகளிலும், காங்கிரஸ் 78 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 இடங்களிலும் வெற்றிப்பெற்றன. இதனையடுத்து கர்நாடகாவில் பாஜக-விற்கு எதிராக ஆட்சியமைக்க காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் இணைந்து ஆட்சி அமைக்கிறது.

கர்நாடகாவின் முதல்வராக மதச்சார்பற்ற ஜனதா தளம் மாநில தலைவர் HD குமாரசாமி புதன் அன்று முதல்வராக பதவியேற்கின்றார். பதவியேற்பு விழாவில் பங்கேற்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்திக்கு அழைப்பு விடுத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இன்று HD குமாரசாமி டெல்லி பய,ணம் மேற்கொள்ளவுது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக நேற்று திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக HD குமாரசாமி தமிழகம் வந்தார். அப்போது காவிரி விவகாரம் குறித்து செய்தியாளர்கள் வினவுகையில்... காவிரி விகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பினை பின்பற்றுவது அவசியம் என தெரிவித்துள்ளார்.

இருமாநில விவசாயிகளுமே சிரமமான சூழலை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த பிரச்சனையை தீர்க்க உச்சநீதிமன்ற தீர்ப்பதில் தான் முழு ஒத்துழைப்பு வழங்கப் போவதாகவும் தெரிவித்தது குறிப்பிடத்தக்ககது.