ஆரோக்கியத்தைத் தரும் பாகற்காயை எப்படி பயன்படுத்தினால் யூரிக் அமிலம் குறையும்?

Uric acid And Bitter Gourd : உடலில் உண்டாகும் கழிவுகளில் ஒன்று யூரிக் அமிலம். இது அளவிற்கு அதிகமானால் மூட்டுகளில் சேர்ந்து, வலியை உண்டாக்குகிறது, இதை குறைக்க பாகற்காயை எப்படி பயன்படுத்தலாம் என தெரிந்துக் கொள்வோம்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 28, 2024, 05:27 PM IST
  • யூரிக் அமிலத்தைக் குறைக்கும் பாகற்காய்
  • பாகற்காயின் சிறப்புப் பண்புகள்
  • ஆரோக்கியத்தை மேம்படுத்தி, நோய்களை விரட்டும் காய்
ஆரோக்கியத்தைத் தரும் பாகற்காயை எப்படி பயன்படுத்தினால் யூரிக் அமிலம் குறையும்? title=

Bitter Gourd to control Uric Acid: இயற்கையாக கிடைக்கும் காய்கறிகளை அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டால், ஆரோக்கியம் நல்லவிதமாக மேம்படும். ஆரோக்கியம் மேம்படுவது ஒருபுறம் என்றால், உணவுகள் உண்பதால் நமது உடலில் உருவாகும் அமிலங்களின் அளவு அதிகரித்தாலோ அல்லது குறைந்தாலோ நோய்களால் பாதிக்கப்படுவோம். யூரிக் அமிலத்தின் அளவைக் குறைப்பதில் திறம்பட செயலாற்றும் காய்கறிகளில் கசப்பான ஆனால் ஆரோக்கியத்தைத் தரும் காய் பாகற்காய்.

உடலில் உண்டாகும் கழிவுகளில் ஒன்று யூரிக் அமிலம். இது அளவிற்கு அதிகமானால் மூட்டுகளில் சேர்ந்து, வலியை உண்டாக்குகிறது, இதை குறைக்க பாகற்காயை எப்படி பயன்படுத்தலாம் என தெரிந்துக் கொள்வோம்.

தவறான உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் மோசமான வாழ்க்கை முறை காரணமாக, யூரிக் அமில பிரச்சனை அதிகரித்து வருகிறது.  பியூரின் என்ற வேதிப்பொருளால் உருவாகும் யூரிக் அமிலம் உடலில் அதிகரித்தால் பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்படும்.

சிறுநீரகங்களால் வடிகட்டப்படும் இரத்தம் உடலுக்குள் செலுத்தப்பட்டு, யூரிக் அமிலம் உட்பட கழிவுகள் சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகிறது. ஆனால் சிறுநீரகங்கள் சரியாகச் செயல்படாதபோதோ அல்லது யூரிக் அமில சுரப்பு அதிகரிக்கும்போதோ, இந்த அமிலம் படிக வடிவில் மூட்டுகளில் படியத் தொடங்கும்.

மேலும் படிக்க | ஊட்டச்சத்துள்ள பழம் என்றாலும் ‘டிராகன்’ ஏற்படுத்தும் பக்கவிளைவுகள் மோசமானது! பழத்தின் பக்கவிளைவுகள்!

யூரிம் அமிலம் உடலில் அதிகரித்தால், மூட்டுகளில் வலி, வீக்கம் உட்பட பல்வேறு வகையான பிரச்சனைகள் ஏற்படத் தொடங்கும். உடலில் உருவாகும் யூரிக் அமிலத்தின் அளவைக் கட்டுப்படுத்த, உங்கள் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இதுபோன்ற சில வீட்டு வைத்தியங்களும் யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்த உதவும்.  

யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தும் பாகற்காய் சாறு
பாகற்காய் சாறு உட்கொள்வது உடலில் உள்ள யூரிக் அமிலத்தின் அளவைக் கட்டுப்படுத்துவதில் (Uric Acid Home Remedies) மிகவும் நன்மை பயக்கும் (Bitter Gourd Juice For Uric Acid) என்று நம்பப்படுகிறது. பாகற்காய் பல மருத்துவ குணங்கள் நிறைந்தது. இதில் வைட்டமின் சி, இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

இரத்தத்தைச் சுத்திகரிப்பதன் மூலம் உருவாகும் யூரிக் அமிலத்தின் அளவைக் குறைக்க பாகற்காய் ஜூஸ் உதவுகிறது. அவ்வப்போது பாகற்காயை சாறாக தயாரித்து குடித்து வந்தால், மூட்டு வலி மற்றும் வீக்கம் குறையும்.

பாகற்காய் ஜூஸை எப்போது, ​​எப்படி பருக வேண்டும்?
உடலில் யூரிக் அமிலத்தின் அளவைக் கட்டுப்படுத்த, தினமும் காலையில் ஒரு கப் பாகற்காய் சாற்றை உட்கொள்ளலாம். பாகற்காயை சமைத்தும் உண்ணலாம். ஆனால், பாகற்காயை சாறாக பருகும்போது அதன் தாக்கம் அதிகமாக இருக்கும், பல நோய்கள் குணமாகும்.

பாகற்காய் சாறு குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
பாகற்காய் சாற்றை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.
தினசரி பாகற்காய் சாறு உட்கொள்வதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
பாகற்காய் சாற்றை அவ்வப்போது குடிப்பதால் கல்லீரலில் உள்ள அழுக்குகள் வெளியேறும்,  கல்லீரல் செயல்பாடும் மேம்படும்.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் பாகற்காய் சாறு குடித்து வந்தால் உடல் எடை குறையும்.
பாகற்காய் சாறு உட்கொள்வதால் உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படும்.

(பொறுப்புத் துறப்பு- இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இதை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். உடல் நலம் தொடர்பான எந்த பிரச்சனைகளுக்கும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | உயர் இரத்த அழுத்தத்திற்கு நிவாரணமாக அமையும் சில எளிய வீட்டு வைத்தியங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News