கொலஸ்ட்ராலை கரைக்கணுமா; இந்த அற்புத பானம் நிச்சயமாக கை கொடுக்கும்

கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த அனைத்து வகையான டிப்ஸ்கள் உள்ளன, ஆனால் சில பானங்கள் மூலம் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தலாம். 

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 23, 2022, 01:12 PM IST
  • கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த என்ன செய்வது
  • கொலஸ்ட்ரால் ஏன் அதிகரிக்கிறது
  • கொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் பானங்கள்
கொலஸ்ட்ராலை கரைக்கணுமா; இந்த அற்புத பானம் நிச்சயமாக கை கொடுக்கும் title=

அதிகரித்த கொலஸ்ட்ரால் மாரடைப்பு ஏற்படுத்துவதற்க்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. இதுபோன்ற சூழ்நிலையில், உடலில் உள்ள கொழுப்பைக் கட்டுப்படுத்த நம் உடலை சிறப்பாக கவனித்துக் கொள்ள வேண்டும், இல்லையெனில் அவை பல நோய்களை ஏற்படுத்தலாம். 

பொதுவாக உடலில் இரண்டு வகையான கொலஸ்ட்ரால் இருக்கிறது. ஒன்று நல்ல கொலஸ்ட்ரால் மற்றொன்ரு கெட்ட கொலஸ்ட்ரால். உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால், மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது, எனவே இதுபோன்ற சூழ்நிலையில், உங்கள் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்ய வேண்டும்.

மேலும் படிக்க | Raw Ginger: மாரடைப்பு அபாயத்தை பெரிதும் குறைக்கும் ‘பச்சை’ இஞ்சி..!!

சிலர் வீட்டு வைத்தியம் மூலம் உடலில் உள்ள கொழுப்பைக் கட்டுப்படுத்த முயற்சி செய்கிறார்கள், சிலர் சிறப்பு மூலிகை பானங்களை உட்கொள்கிறார்கள், அதிலிருந்து உடல் கொழுப்பை எளிதாகக் கட்டுப்படுத்தலாம். அப்படியான பானங்கள் எவை, என்பதை தெரிந்து கொள்ளவோம்.

கிரீன் டீ கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும்
கிரீன்-டீ உடல் எடையை குறைப்பது மட்டுமல்லாமல், கொலஸ்ட்ராலையும் கட்டுப்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா? அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் அதை தினமும் உட்கொண்டால் சிறந்த பலனைப் பெறுவீர்கள். மேலும் கிரீன் டீ குடிப்பது உள்ளுறுப்பு கொழுப்புச் சேர்வை 17.8%குறைக்கவும், கொலஸ்ட்ரால் உறிஞ்சுதல் மற்றும் எல்டிஎல் ஆக்சிஜனேற்றம் குறைக்கவும், இரத்த அழுத்தம் (38), (39), (40) குறைக்கவும் உதவும்

தக்காளி சாறு கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும்
தக்காளி சாறு மூலம் உடலில் கொலஸ்ட்ராலையும் கட்டுக்குள் வைக்கலாம். ஏனெனில் லைகோபீன் எனப்படும் சத்துக்கள் தக்காளியில் காணப்படுகின்றன. இது உங்கள் உடலில் உள்ள கொழுப்பின் அளவை மேம்படுத்துகிறது. தக்காளி சாற்றில் கொலஸ்ட்ராலை குறைக்கும் நார்ச்சத்து மற்றும் நியாசின் இருக்கின்றன. ஆகையால், இதை தினமும் ஒரு கிளாஸ் குடிப்பது நல்லது.

ஓட்ஸ் பால் கூட நன்மை பயக்கும்
இது தவிர, ஓட்ஸ் பாலில் ஏராளமான ஊட்டச்சத்துகள் உள்ளன. ஓட்ஸ் பாலை மிக எளிதாக நமது உணவுப் பட்டியலில் சோ்த்துக் கொள்ளலாம். ஓட்ஸ் பாலில் குறைவான அளவில் கொலஸ்ட்ரால் உள்ளது. ஆனால் ஓட்ஸ் பாலில் கொழுப்புச் சத்து இல்லை. அதனால் உடல் எடையைக் குறைப்பதற்கு, சிறந்த பானமாக ஓட்ஸ் பால் இருக்கும். மேலும் ஓட்ஸ் பாலில் கரையக்கூடிய நாா்ச்சத்து அதிகம் இருப்பதால், அந்த பாலைக் குடித்தால் நீண்ட நேரம் நமது வயிறு பசியறியாமல் நிறைந்து இருக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலுன் படிக்க | கோடையில் திராட்சை அளிக்கும் அற்புத நன்மைகள்: பல வித நோய்களுக்கு ஒரே நிவாரணம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News