உடல் பருமன் முதல் நீரிழிவு வரை... வாழைக்காய் செய்யும் அற்புதங்கள் பல

Benefits of Raw Banana: வாழைப்பழம் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்கும் என்பது அனைவரும் தெரிந்த விஷயம். ஆனால், வாழைக்காய் சாப்பிடுவதால் வாயுத்தொல்லை ஏற்படும் என்ற தவறான எண்ணம் பலருக்கு இருக்கிறது. ஆனால் உண்மையில் வாழைக்காயில் பல ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 21, 2024, 04:34 PM IST
  • வாழைக்காயை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது என ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
  • நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் நிறைந்த வாழைக்காய்.
  • மலச்சிக்கல் மற்றும் வாயு போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவுகிறது வாழைக்காய்.
உடல் பருமன் முதல் நீரிழிவு வரை... வாழைக்காய் செய்யும் அற்புதங்கள் பல title=

Benefits of Raw Banana: வாழைப்பழம் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்கும் என்பது அனைவரும் தெரிந்த விஷயம். ஆனால், வாழைக்காய் சாப்பிடுவதால் வாயுத்தொல்லை ஏற்படும் என்ற தவறான எண்ணம் பலருக்கு இருக்கிறது. அதனால், அதனை சாப்பிடுவதை பலர் தவிர்க்கின்றனர். ஆனால் உண்மையில் வாழைக்காயில் பல ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். வாழைக்காயில் பொட்டாசியம் மெக்னீசியம், வைட்டமின் பி6, வைட்டமின் சி ஆகிய ஊட்டச்சத்துக்களுடன், நார்ச்சத்தும் நிறைந்துள்ளது.

வாழைக்காயை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது என ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். வாழைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால், இரத்த சர்க்கரை அளவு, கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம் போன்றவை கட்டுக்குள் இருக்கும். உடல் பருமனை குறைக்க நினைப்பவர்களுக்கு  வாழைக்காய் சிறந்த தீர்வாக இருக்கும். இந்நிலையில் வாழைக்காயில் நிறைந்துள்ள ஆரோக்கிய நன்மைகளை (Health Tips) சற்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.

இதய ஆரோக்கியம் (Raw Banana For Heart Health)

வாழைக்காயில் உள்ள பொட்டாசியம் சத்து, இதயத் துடிப்பை சீராக்கி, இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைப்பதால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். இதில் கொலஸ்ட்ராலை எரிக்கும் பண்பு இருப்பதால், மாரடைப்பு அபாயமும் தடுக்கப்படுகிறது.

நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருக்கும் வாழைக்காய் (Raw Banana For Diabetes Control)

வாழைக்காயில் காணப்படும் நீரழிவு எதிர்ப்பு பண்புகள், குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்தி, இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது. நியறிவு நோயாளிகள் இதனை தவறாமல் எடுத்துக் கொள்வது நல்லது.

மேலும் படிக்க | சாக்லேட் மட்டுமல்ல... பிஸ்கட்டும் விஷம் தான்... எச்சரிக்கும் நிபுணர்கள்

குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வாழைக்காய் ( Raw Banana To Boost Digestion)

வாழைக்காயில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், மலச்சிக்கல் வாயு போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவுகிறது. செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கி, உடல் ஆரோக்கியமும் ஜீரண சக்தியும் சிறப்பாக இருக்கும். பெருங்குடல் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கும் சக்தி வாய் காற்று உண்டு எனவும் கூறப்படுகிறது.

உடல் பருமனை குறைக்க உதவும் வாழைக்காய் (Raw Banana For Weight Loss)

வாழைக்காயில் உள்ள நார்ச்சத்து, உடல் எடையை குறைக்க உதவுகிறது. வளர்ச்சிதை மாற்றம் அதிகரித்து, கொழுப்பு அதிகம் எடுக்கப்பட எரிக்கப்படுவதால், உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு வாழ்க சிறந்த தேர்வாக இருக்கும்.

சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வாழைக்காய் (Raw Banana For Skin Care)

உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் திறன் வாழை காய்க்கும் உண்டு. வாழைக்காயில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் சருமத்தை இளமையாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும். சருமத்தில் நூல் தோன்றும் சுருக்கங்கள் கரும்புள்ளிகள் நீங்கும்.

பல்வேறு சத்துக்கள் நிறைந்த வாழைக்காயை வழக்கமாக டயட்டில் சேர்த்துக் கொள்வதன் மூலம் பல நோய்கள் வராமல் தடுக்கலாம். வாழைக்காயை சிப்ஸ் ஆக சாப்பிடுவதை விட வேக வைத்து, பொரியலாக சமைத்து சாப்பிடுவதால் நன்மைகள் பலவற்றை பெறலாம்.

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | பால் பிடிக்காதா? பரவாயில்லை... கால்சியம் கிடைக்க இந்த உணவுகளையும் சாப்பிடலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News