புதுடெல்லி: காலரா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், அது நிலைமையை மோசமாக்குவதோடு, மரணத்திற்கும் வழிவகுக்கும். காலரா எதனால் ஏற்படுகிறது அதன் பாதிப்புகள் என்ன என்பதைத் தெரிந்துக் கொள்ளுங்கள். முறையான கழிவுநீர் மற்றும் நீர் சுத்திகரிப்பு அமைப்புகளால், காலரா நோய் ஒழிக்கப்படுகிறது. ஆனால் உலகின் அனைத்து இடங்களிலுமே காலரா இல்லை என்று சொல்லும் நிலைமை வந்தால் தான் அடிப்படை சுகாதரம் சரியாக இருக்கும் என்று தைரியமாக சொல்லலாம். அண்டுதோறும்1.3 மில்லியன் முதல் 4 மில்லியன் அளவிலான மக்கள் காலராவால் பாதிக்கப்படுவதாக, உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.
காலரா என்றால் என்ன?
காலரா என்பது சிறுகுடலில் ஏற்படும் ஒரு கடுமையான தொற்று ஆகும், காலரா என்பது ஒரு பாக்டீரியா நோயாகும், இது வயிற்றுப்போக்கு மற்றும் தீவிர நீரிழப்பு போன்ற அறிகுறிகளுக்கு வழிவகுக்கிறது. நீர் மூலம் பரவும் காலரா நோயை எச்சரிக்கையாக இருந்தால் தவிர்க்கலாம்.
காலரா எதனால் ஏற்படுகிறது?
அசுத்தமான உணவு அல்லது தண்ணீர் மூலம் காலரா பரவுகிறது. சுகாதாரமற்ற இடங்களில் வசிப்பவர்கள் இந்த நோயால் பாதிக்கப்படும் அபாயம் அதிகம். முக்கியமாக விப்ரியோ காலரா என்ற பாக்டீரியாவால் ஏற்படும் இந்த நோயின் அறிகுறி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஆகும்.
தொடர்ந்து வாந்தி பேதி ஆனால், உடலின் நீர்ச்சத்து குறைவதுடன், உடலில் உள்ள திரவத்தின் அளவு குறைகிறது. அதிகப்படியான திரவம் மற்றும் எலக்ட்ரோலைட் போன்றவற்றைக் கொடுத்து காலாராவில் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மேலும் படிக்க | Covid 4th Wave: விரைவில் ரிலீஸாகிறதா கோவிட் புது அலை? எச்சரிக்கை விடும் WHO
காலரா ஆபத்து காரணிகள்
கடுமையான வயிற்றுப்போக்கு சுகாதார நிலையுடன் தொடர்புடைய சில ஆபத்து காரணிகள் என்பதில் வறுமை அடிப்படையான விஷயமாக இருக்கிறது. பாதுகாப்பான உணவு, தண்ணீர் மற்றும் போதுமான சுகாதாரத்திற்கான அணுகல் இல்லாமை என காலராவுக்கு பல காரணங்கள் இருக்கின்றன.
காலராவின் அறிகுறிகள்
காலரா எப்போதும் அறிகுறிகளாலேயே அறிந்துக் கொள்ளப்படுகிறது. தளர்வான இயக்கம், வாந்தி, குமட்டல் மற்றும் நீரிழப்பு போன்றவற்றை பார்த்தால், அது காலரா என்று தெரிந்துக் கொள்ளலாம்.
காலராவை எவ்வாறு நிர்வகிப்பது?
காலரா நோய்த்தொற்று அபாயத்தைத் தடுக்க, சில அடிப்படை விஷயங்களில் கவனம் செலுத்தினாலே போதும். சாப்பிடுவதற்கு முன் கைகளை சரியாக கழுவுதல் என்பது இதில் முதல் படியாகும். வாய் அலம்புவதற்கும், உணவு தயாரிக்கவும் பாட்டில் மற்றும் சீல் செய்யப்பட்ட தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும். சுத்தமான கழிவறைகளைப் பயன்படுத்துங்கள். காய்கறிகளை சமைப்பதற்கு முன் நன்கு கழுவி பயன்படுத்தினால் காலரா நோய் உங்களுக்கு ஹலோ சொல்லாது.
மேலும் படிக்க | 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய குரங்கம்மை...எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ