வீட்டிலேயே இருந்து எடையை குறைக்கலாம்! ‘இந்த’ உடற்பயிற்சிகளை செய்தால் போதும்..

Home Workouts For Weight Loss : பலருக்கு உடலை குறைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அதற்கு வெளியில் செல்ல பயமாக இருக்கும். அவர்கள், வீட்டிலேயே சில உடற்பயிற்சிகளை செய்யலாம். அவை என்னென்ன தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Jun 25, 2024, 07:55 PM IST
  • வீட்டில் செய்யக்கூடிய உடற்பயிற்சிகள்
  • எளிமையாக இருக்கும்
  • நடனம், யோகா கூட செய்யலாம்!
வீட்டிலேயே இருந்து எடையை குறைக்கலாம்! ‘இந்த’ உடற்பயிற்சிகளை செய்தால் போதும்.. title=

Home Workouts For Weight Loss : உலகளவில் இருக்கும் மக்கள் தொகையில், வயது வித்தியாசம் இன்றி பலர் ஒரு பொதுவான பிரச்சனையால் அவதிப்பட்டு வருகின்றனர். அதுதான், உடல் பருமன் பிரச்சனை. பலருக்கு, சிறு வயதில் இருந்தே உடல் பருமன் இருக்கும். இதனுடனேயே வளரும் இவர்கள், பிறரால் கேலிக்குள்ளாக்கப்பட்டு தங்களை தாங்களே மிகவும் குறைவாக மதிப்பிட்டுக்கொள்கின்றனர். 

ஒருவர் உடல் பருமனுடன் இருப்பதற்கு எது வேண்டுமானாலும் காரணமாக இருக்கலாம். ஆனால், உண்மையாகவே சோம்பேறித்தனத்தால் அதிக எடையுடன் இருப்பவர்கள், கெட்ட பழக்கங்களை விட்டொழித்து இளைக்க வேண்டும் என்று விரும்புவர். ஆனால் வானிலையோ, ஒரே மாதிரி அனைத்து நேரங்களிலும் இருப்பதில்லை. சில சமயங்களில் வெயில் காய்ந்தால், பல சமயங்களில் மழை கொட்டுகிறது. அது போன்ற சமயங்களில் வீட்டிலிருந்தே சில வர்க்-அவுட்களை செய்யலாம். அவை என்னென்ன தெரியுமா?

உடல் வலிமை பயிற்சி:

வீட்டிலேயே இருந்து உடற்பயிற்சி செய்ய உகந்தது, உடல் வலிமை (Strength Training) உடற்பயிற்சியாகும். இதை, ஒட்டுமொத்த உடல் வலிமையை வைத்து செய்ய வேண்டும். 

ஸ்குவாட்ஸ்:

இதை தமிழில் தோப்புகரணம் என்பர். கொஞ்சம் வித்தியாசமாக போட்டால், அது ஸ்குவாட்ஸ். இந்த உடற்பயிற்சி தொடை சதையை குறைக்க உதவும்/ 

ப்ளாங்க்:

கலோரிகளை அதிவேகமாக குறைக்க உதவும் உடற்பயிற்சிகளுள் ஒன்று, ப்ளாங்க். இந்த உடற்பயிற்சியை 30 விநாடிகள் முதல் 1 நிமிடம் வரை செய்யலாம். 

லஞ்சஸ்:

தொடை சதை மற்றும் இடுப்பின் இரு பக்கங்களில் இருக்கும் அதிக தசைகளை குறைக்க உதவும் உடற்பயிற்சிகளுள் ஒன்று லஞ்சஸ். 

புஷ் அப்:

நம் உடலின் ஒட்டுமொத்த வலிமையை சேர்த்து செய்ய வேண்டியது புஷ் அப். குறிப்பாக இதை செய்வதால் நமது தோள்பட்டை மற்றும் கைகள் வலிமையாகலாம். இந்த உடற்பயிற்சிகள் உடல் எடையை குறைக்க உதவுவதோடு மட்டுமன்றி, உடலின் ஆற்றலை அதிகரிக்கவும் உதவும். 

கார்டியோ உடற்பயிற்சிகள்:

உள்ளிருந்து உங்கள் உடலை வலிமைப்படுத்த கார்டியோ உடற்பயிற்சிகள் முக்கியமானதாக ஆகிறது. நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி அல்லது சைக்கிள் ஓட்டுவது போன்ற பயிற்சிகளை விரும்பினால் இதை செய்யலாம். ஆனால், கோடை வெப்பத்தின் போது இவை அனைத்தையும் செய்ய முடியாமல் போகலாம். இதை வீட்டில் அல்லது நான்கு சுவற்றுக்குள் செய்ய, ட்ரெட் மில், ஸ்டாண்டர்ட் சைக்ளிங் ஆகியவற்றை செய்யலாம். 

ஹை நீஸ்:

ஒரே இடத்தில் நின்றவாறு கால் முட்டிகள் உங்கள் இடுப்பு வரை வரும் அளவிற்கு செய்யும் உடற்பயிற்சிதான், ஹை நீஸ் (High Knees). இதை எவ்வளவு வேகமாக செய்கிறோமோ அந்த அளவிற்கு உடலில் கொழுப்பு குறையும் என கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | டக்குன்னு வயிறு தட்டையாகனுமா? தினமும் 10 நிமிடம் ‘இதை’ பண்ணுங்க..

ஜம்பிங் ஜேக்:

குதித்து செய்ய வேண்டிய உடற்பயிற்சி, ஜம்பிங் ஜேக்ஸ். இதனை, நீங்கள் எண்ணிக்கை ரீதியாகவும் செய்யலாம். அப்படி இல்லை என்றால் நிமிடங்கள் படியும் செய்யலாம். இதை செய்வதால் கால் தசைகள் வலுப்பெற்று தொடை தசை குறைய வாய்ப்பிருக்கிறது. 

நடனம், யோகா:

உடற்பயிற்சியோ, வீட்டு வேலையோ, நாம் உடலுக்கு உழைப்பு கொடுக்கிறோமா இல்லையா என்பதுதான் முக்கியம். எனவே, உடற்பயிற்சி எந்த வகையில் இருந்தாலும் அதற்கு பாஸ் மார்க்தான். நடனம் ஆடுவது, யோகா செய்வதும் உடற்பயிற்சியில் அடங்கும். எனவே, உங்களுக்கு பிடித்த பாடலை போட்டு இஷ்டத்திற்கு வியர்க்க விறுவிறுக்க நடனமாடுங்கள். இதை செய்வதால் கண்டிப்பாக உடலில் இருக்கும் கலோரிகள் குறையும். அதே போல, யோகா பயிற்சிகளையும் தகுந்த அறிவுரைகளுடன் செய்து பழகலாம். 

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | ஆண்களின் வீரியத்தை அதிகரிக்கும் உடற்பயிற்சிகள்! ஈசியா செய்யலாம்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News