பருவமழைக்கு வருவதற்கு முன்பு கொடூரமான வெப்ப தாக்குதலுக்கு தயாராகுங்கள். அடுத்த 4 நாட்களுக்கு யாருக்கும் நிம்மதி இருக்காது. வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும். வெப்பம் காரணமாக, பூமியில் 48 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் இருக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
அடுத்த நான்கு நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் 45 டிகிரியில் இருந்து 48 டிகிரி செல்ஷியஸ் வரை இருக்கும். எனவே பல பகுதிகளில் எச்சிரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. நாட்டில் 4 மாநிலங்களில் பயங்கரமான வெப்பநிலைக இருக்கும். அடுத்த இரண்டு நாட்களில் நாட்டின் பெரும்பாலான நகரங்களில் வெப்பம் 45 டிகிரி செல்ஷியஸ் இருக்கும், அதே சமயத்தில், மத்திய இந்தியாவின் சில பகுதிகளில் வெப்பம் 47 டிகிரிக்கு அதிகமாக இருக்கும். ராஜஸ்தானில் 48 டிகிரிக்கு அதிகமாக வெப்பம் இருக்கும் என அறிவிக்கபட்டு உள்ளது.
அடுத்த 4 நாட்களுக்கு ஹரியானா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் மேற்கு உத்தரப் பிரதேச மாநிலங்களில் ஏற்படும் வெப்பநிலைக்கு காரணம் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரம் பெரிதும் குறைவதால் சூரிய கதிர்வீச்சின் வெப்பம் பூமியைச் சுற்றி அதிகரிக்கும், இதனால் பகல் மற்றும் இரவில் அதிகம் புளக்கம் ஏற்படும்.
நாளை முதல் அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்க போவதால், குறிப்பாக வட மாநிலங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதனால் மக்கள் உஷராக இருக்கும் படி, தேவையான முன்னெச்சரிக்கையாக இருக்கும் படி இந்தியா வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்து உள்ளது.