குளிர்பானங்கள் குடித்தால் ஆணுறுப்பு பெரிதாகுமா... அந்த விஷயத்தில் பிரச்னை வரும்!

Side Effects Of Cool Drinks: குளிர்பானங்களை குடித்தால், டெஸ்டோஸ்டிரோன் அளவு குறையும் என பல ஆய்வுகள் கூறிவந்த நிலையில், அதற்கு முரணாக தற்போது புதிய ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Feb 25, 2023, 11:31 AM IST
  • சீன ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.
  • எலிகளிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
  • ஆணுறுப்பு பெரிதாகினாலும் பிரச்சனை ஏற்படும்.
குளிர்பானங்கள் குடித்தால் ஆணுறுப்பு பெரிதாகுமா... அந்த விஷயத்தில் பிரச்னை வரும்! title=

Side Effects Of Cool Drinks: உங்கள் கணவரோ, சகோதரரோ அல்லது குடும்ப உறுப்பினரோ, நட்பு வட்டாரத்தில் உள்ள ஆண்களில் யாராவது குளிர் பானங்களை அதிகம் விரும்புபவர்களாக இருந்தால், அவர்களுக்கு இந்த கடுமையான எச்சரிக்கைகளை கூறுங்கள். 

ஆண்களின் ஆரோக்கியத்தில் இந்த குளிர் பானங்களால் ஏற்படுத்துக்கூடிய பாதிப்புகள் குறித்து அதிர்ச்சியூட்டும் கண்டுபிடிப்பை மேற்கொண்டனர். இதனை படித்த பின்னர் அந்த பானங்கள் அருந்துவதை அப்படியே நிறுத்துங்கள். 

கார்பனேற்றப்பட்ட குளிர் பானங்கள் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரித்து, ஆண் எலிகளில் பிறப்புறுப்பு அளவை அதிகரித்திருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதுபோன்ற குளிர் பானங்களை குடிப்பது டெஸ்டோஸ்டிரோன் அளவைக் குறைக்கும் என்று கூறிய முந்தைய ஆராய்ச்சிகளுக்கு இது முரணாக உள்ளது.

விரைகளில் பாதிப்பு

கார்பனேற்றப்பட்ட பானங்களை அதிக அளவில் குடிப்பது புற்றுநோய், உடல் பருமன், நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கும் என்று ஆய்வில் நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். இருப்பினும், பெண்களுக்கும் பாதுகாப்பானது இல்லை.  இந்த குளிர்பானங்கள் பெண் எலிகளில் கருப்பையை சுருங்கச் செய்கிறது என்று ஆய்வுகள் குறிப்பிடுவதால் அவர்களின் இனப்பெருக்க ஆரோக்கியம் ஆபத்தில் இருக்க வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க | சுகர் பிரச்னை உள்ளவங்க இந்த டிரிங்ஸை மிஸ் பண்ணாதீங்க

சமீபத்திய ஆய்வின்படி, இரண்டு பிராண்டுகளின் குளிர்பானங்கள், 100 எலிகளுக்கு 15 நாட்களுக்கு கொடுக்கப்பட்டது. அதே நேரத்தில் ஒரு மற்றொரு பிரிவு எலிகளுக்கு சுத்தமான நீர் வழங்கப்பட்டது. தண்ணீர் வழங்கப்பட்ட எலிகளை ஒப்பிடும்போது, குளிர்பானம் கொடுக்கப்பட்ட எலிகளின் விரைகள் குறிப்பிடத்தக்க அளவில் பெரிதாகியுள்ளது. குளிர்பானங்கள் கொடுக்கப்பட்ட எலிகளிலும் அதிக அளவு டெஸ்டோஸ்டிரோன் இருந்தது. இத்தகைய பானங்களை அதிக அளவு எடுத்துக்கொண்டால் விரைகள் பெரிதாகக்கூடும் என்பதை ஆய்வுகள் முடிவுகள் நிரூபிக்கின்றன. இருப்பினும், நீண்டகால விளைவுகள் தெளிவாக தெரியவில்லை இல்லை.

குளிர்பானங்கள் ஆணுறுப்பின் அளவை எவ்வாறு பாதிக்கிறது?

30 ஆண்டுகளில் ஆணுறுப்பின் சராசரி நீளம் 30 சதவீதம் வளரும் என்று ஒரு தனி ஆய்வு கண்டறிந்துள்ளது. சில ஆண்கள் இது ஒரு நல்ல விஷயம் என்று நினைக்கலாம். இருப்பினும், மருத்துவர்கள் இதுகுறித்து கவலை கொள்கிறார்கள். இதுகுறித்து, ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் ஒரு குழு, இரசாயனங்கள், மோசமான உணவு மற்றும் மாற்றமடைந்த வாழ்க்கை முறை ஆகியவற்றின் வெளிப்பாடு காரணமாக ஆணுறுப்பின் அளவு அதிகரிப்பு காரணமாக இருக்கலாம் என்று கண்டறிந்தது. இது கருவுறுதலையும் பாதிக்கலாம் என தெரிவித்துள்ளது.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள், பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | ஆண்களுக்கு ஹெல்த் அலர்ட்! சிறுநீரகத்தை பலவீனப்படுத்தும் ’இந்த’ உணவுகள் வேண்டாமே!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News