Sleeping Position: எந்த பக்கம் படுத்தால் நன்றாக தூங்கலாம்? மருத்துவர்கள் கூறும் டிப்ஸ்!

Sleeping Position For Better Sleep: இரவில் தூக்கம் வரவில்லை என்றால் அவர்களின் ஒட்டுமொத்த உடல் நலனும் பாதிப்படையும். சிறப்பான தூக்கத்திற்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா?  

Written by - Yuvashree | Last Updated : Feb 15, 2024, 05:21 PM IST
  • சிறந்த தூக்கத்திற்கான டிப்ஸ்
  • ஒரு பக்கமாக படுக்க வேண்டும்
  • என்ன செய்தால் நல்ல தூக்கம் வரும்?
Sleeping Position: எந்த பக்கம் படுத்தால் நன்றாக தூங்கலாம்? மருத்துவர்கள் கூறும் டிப்ஸ்! title=

Sleeping Position For Better Sleep: தூக்கம் என்பது, நமது தினசரி வாழ்வின் முக்கியமான அம்சமாகும். இரவில் தூக்கம் சரியாக இல்லை என்றால், பகலில் பலரால் சரியாக செயல்பட இயலாது என்பது அனைவரும் அறிந்த உண்மயே. இரவில் நம் உடல் எத்தனை மணி நேரம் கேட்கிறதோ, அத்தனை மணி நேரம் தூங்கினால் ஒழிய, நமது உடல் உறுப்புகள் சரியாக செயல்படும். நல்ல தூக்கத்தால் எடை அதிகரிப்பதை தவிர்க்கலாம், இருதய நோய் பாதிப்புகள் வராமலும் தடுக்கலாம். அது மட்டுமல்ல, உடலுக்கு நல்ல ஓய்வு கொடுக்கும் நேரமும் தூக்கம்தான். 

தூங்கும் நிலையும்-தூக்கமும்..

நாம் எந்த நிலையில் தூங்குகிறோம் என்பதை பொறுத்து நல்ல தூக்கமும் அமையும்.  தூங்கும் போது நாம் ஏற்படுத்திக்கொள்ளும் தோரணைகள், தூக்கத்துடன் சம்பந்தப்பட்டதாக இருக்கும். உதாரணத்திற்கு, நாம் ஒரே பக்கமாக படுத்தால் காலையில் எழுந்து கொள்ளும் போது அந்த பக்கத்தில் வலி இருக்கும். நமது வசதிக்காக மட்டுமன்றி, நல்ல தூக்கத்திற்காகவும் சரியான நிலையில் படுக்க வேண்டும். இதில் முக்கியமாக பார்க்க வேண்டியது, முதுகெலும்பு சீரமைப்பை பார்க்க வேண்டும். முதுகெலும்பு, சீராக சமநிலையில் இருக்கும் வகையில் படுக்க வேண்டும். 

மேலும் படிக்க | ஜிம்மிற்கு போகும் முன் சாப்பிடக்கூடாத 5 உணவுகள்...

சரியான அமைப்பு எது?

பக்கவாட்டில் தூங்குவது, பொதுவாக அனைவரும் பயன்படுத்தும் ஒரு தோரணையாகும். இதனால் பல நன்மைகள் உள்ளன. இப்படி தூங்குவது, நீங்கள் குறட்டை விடுவதை தவிர்க்க உதவும். அது மட்டுமன்றி, நல்ல தூக்கத்திற்கு உதவும். ஆனாலும், அப்படி தூங்குகையில் அதற்கு சப்போர்ட் ஆக தலையணையை தலைக்கும் கழுத்திற்கும் ஏற்றவாறு வைக்க வேண்டும். இதனால் முதுகெலும்பு சீராகும். ஒரு தலையணையை முட்டி மற்றும் இடுப்புக்கு கீழும் வைக்கலாம். இதனால் சரியாக தூங்கும் நிலையையும், நல்ல தூக்கத்தையும் நீங்கள் அடையளாம். 

சிலர், குப்புற படுத்து தூங்குவர். ஆனால் இப்படி படுத்து உறங்குவதை எந்த மருத்துவரும் பரிந்துரைப்பதில்லை. இப்படி தூங்குவதால், கழுத்து மற்றும் முதுகு பகுதியில் வலி ஏற்படும். இந்த பகுதியில் படுத்தால் அடிக்கடி தூக்கத்தில் இருந்து எழுந்திருக்கும் நிலை ஏற்படலாம். கழுத்து வலியை சரிசெய்ய, வராமல் தடுக்க இந்த முறையில் படுப்பதை தவிர்க்கலாம். 

முதுகெலும்பு சீரமைப்பை தாண்டி, இந்த பக்கம் தூக்க நிலைகள் பல்வேறு உடல் செயல்பாடுகளை பாதிக்கலாம். உதாரணத்திற்கு, இடது பக்கத்தில் தூங்குவது சிறந்த செரிமானத்தை உருவாக்கும். மேலும் அமில ரிஃப்ளக்ஸையும் இது தணிக்கும். ஏனென்றால், இந்த நிலை வயிற்றை உணவுக்குழாய்க்கு கீழே வைக்க அனுமதிக்கிறது. இது, வயிற்றில் இருக்கும் அமிலமங்கள் மீண்டும் தொண்டைக்குள் பாய்வதைத் தடுக்கிறது. ஒரு பக்கத்தில் படுப்பதால் நமது தூக்க நிலையை சீர் செய்யலாம். மேலும், இந்த தூக்க தோரணைகள் விரைவான கண் இயக்கத்திற்கும் இது உதவும். 

மேலும் படிக்க | கவனச்சிதறல் ஏற்படாமல் இருக்க..‘இந்த’ 7 யோகாசனங்களை செய்யுங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News