பாஜக நிர்வாகி கைது: சாலை மறியலில் தொண்டர்கள் போலீசாருடன் தள்ளுமுள்ளு - பழனியில் பரபரப்பு

Tamil Nadu News: மதுபான கூடத்திற்குள் அத்துமீறி நுழைந்தது, பணியாளர்களை தாக்கியது உள்பட ஐந்து பிரிவுகளின் கீழ் திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் கனகராஜ் மீது பழனி நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Written by - Sudharsan G | Last Updated : Jan 5, 2025, 10:27 PM IST
  • பாஜக மகளிரணியினர் கடந்த 3ஆம் தேதி போலீசாரால் கைது.
  • அப்போது கைதானவர்களை பார்க்க வந்த இடத்தில் கனகராஜ் போலீசாரிடம் வாக்குவாதம்
  • டாஸ்மாக் பார் 24 மணிநேரமும் இயங்கியதாக குற்றச்சாட்டு
பாஜக நிர்வாகி கைது: சாலை மறியலில் தொண்டர்கள் போலீசாருடன் தள்ளுமுள்ளு - பழனியில் பரபரப்பு title=

Tamil Nadu Latest News Updates: கடந்த ஜன. 3ஆம் தேதி மதுரையில் நடைபெற்ற பாஜக மகளிரணியின் நீதிப் பேரணியில் பங்கேற்க சென்ற திண்டுக்கல் மாவட்ட பாஜக மகளிரணியினர் சிலரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவர்களை பார்க்க சென்ற திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் கனகராஜ் காவல் துறையினருக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்தார். 

மேலும், பாஜக மகளிரணியினர் அடைத்து வைக்கப்பட்டிருந்த திருமண மண்டபத்தை ஒட்டி செயல்பட்டுவந்த தனியார் மதுபானக்கூடத்திற்குள் தனது ஆதரவாளர்களுடன் சென்ற கனகராஜ் சட்ட விரோதமாக மதுபானம் விற்பதாக தெரிவித்தார். குறிப்பாக, சிலர் காலை 9 மணிக்கே மதுபானம் விற்பதாக கூறி கனகராஜ் பேட்டி அளித்தார். ஆனால் தனியார் மதுபான விடுதியில் காலையில் ஊழியர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுதாக கூறப்பட்டது. மேலும்,  மதுபான விடுதியில் இருந்த ஊழியர்களை பாஜகவினர் மிரட்டல் விடுத்து வாக்குவாதம் செய்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. 

கனகராஜ் மீது வழக்குப்பதிவும், கைதும்...

இந்த சம்பவம் தொடர்பாக மதுபான கூடத்திற்குள் அத்துமீறி நுழைந்தது, பணியாளர்களை தாக்கியது உள்பட ஐந்து பிரிவுகளின் கீழ் கனகராஜ் மீது பழனி நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் கனகராஜ் இன்று மாலை கொடைக்கானல் சென்று விட்டு தனது காரில் பழனிக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

மேலும் படிக்க | கூடுகிறது சட்டப்பேரவை: பொங்கல் தொகுப்பில் ரூ.1000 ரொக்கம்? அறிவிப்பு வருமா?

அப்போது பழனி கொடைக்கானல் சாலையில் உள்ள அய்யம்புள்ளி காவல்துறை சோதனைச் சாவடியில் காத்திருந்த போலீசார், பாஜக மாவட்ட தலைவர் கனகராஜ் மற்றும் பாஜக மாவட்ட பொது செயலாளர் செந்தில்குமார் ஆகியோரை கைது செய்தனர். மாவட்டத் தலைவர் கனகராஜ் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்து பழனி நகர காவல் நிலைய முன்பாக ஏராளமான கட்சி நிர்வாகிகள் திரண்டனர். பாஜக மாவட்ட தலைவர் கனகராஜ் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது‌.

பழனியில் பரபரப்பு...

பழனியில் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் கனகராஜ் கைது செய்யப்பட்டதை கண்டித்து பழனி நகர காவல் நிலையத்தை முற்றுகையிட்டு  நூற்றுக்கணக்கான கட்சி தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து நகர் முழுவதும் பாஜகவினர் ஆங்காங்கே சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. 

இதனால், கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ய முயன்றபோது இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று, போலீசார் அனைவரையும் கைது செய்தனர். மேலும் போராட்டத்தின் போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது போலீசாரின் தொப்பியை  போராட்டக்காரர்கள் பறக்கவிட்டதும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

மேலும் படிக்க | 'கிறிஸ்துவர்கள் ஓட்டு விஜய்க்கு போகக் கூடாது என உதயநிதி இதை செய்கிறார்' - ஹெச். ராஜா பளீர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News