கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதற்கான அறிகுறிகள்: கொலஸ்ட்ரால் என்பது உடலில் உள்ள செல்களை உருவாக்க உதவும் மெழுகுப் பொருளாகும். ஆனால் உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு அதிகரித்தால், உடலில் இரத்த ஓட்டத்தில் பிரச்சனை ஏற்படும். இது பெரும்பாலும் கொழுப்பு வைப்புகளின் இருப்பு காரணமாகும். அதேபோல் கெட்ட கொலஸ்ட்ரால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற கடுமையான நோய்களுக்கு வழிவகுக்கும். எனவே உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும் போது என்னென்ன அறிகுறிகள் தோன்றும் என்பதை இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள்.
அதிக கொலஸ்ட்ரால் அறிகுறிகள்
உடலில் கொலஸ்ட்ரால் அதிகரித்தால் நாம் எந்த அறிகுறிகளையும் முன்கூட்டியே கண்டறிய முடியாது. இருப்பினும், அதிகரித்த கொலஸ்ட்ரால் அளவை நீண்ட காலமாக கவனிக்காமல் இருந்தால், கொழுப்பு குவிந்து இரத்தம் கால்களின் நரம்புகளை சென்றடையாது, இதன் காரணமாக புற தமனி நோய் போன்றவை ஏற்படலாம். இது தவிர கிரிட்டிகல் லிம்ப் இஸ்கேமியாவும் ஏற்படலாம்.
மேலும் படிக்க | கொழுப்பை குறைக்கணுமா? இந்த பழக்கத்தை எல்லாம் விட்டுடுங்க
கிரிட்டிகல் லிம்ப் இஸ்கெமியா என்றால் என்ன
கிரிட்டிகல் லிம்ப் இஸ்கெமியாவில், நரம்புகளில் இரத்த ஓட்டம் வெகுவாகக் குறைந்து, அதன் காரணமாக பாதங்கள் மரத்துப்போய், நகங்கள் தடிமனாகி, பல வகையான தோல் நோய்த்தொற்றுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். மேலும் கிரிட்டிகல் லிம்ப் இஸ்கெமியாவில் நீங்கள் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கலாம். அதேபோல் கிரிட்டிகல் லிம்ப் இஸ்கெமியா நோயால் பாதிக்கப்பட்ட நான்கு பேரில் ஒருவர் இறக்கக்கூடும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
கொலஸ்ட்ரால் / கொழுப்பைக் கட்டுப்படுத்துவது எப்படி
கொழுப்பின் அளவைக் குறைக்க, உங்கள் வாழ்க்கை முறைகளில் சில மாற்றங்களைச் செய்யப்பட வேண்டும், அதாவது அதிக கொழுப்பு அமிலங்கள் உள்ள உணவுகளை நீங்கள் கட்டாயம் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும், இது தவிர, தினசரி உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும், ஆனால் உங்களின் நிலை மேலும் மோசமடையத் தொடங்கினால், இந்த மாற்றங்கள் மட்டும் போதாது, உடனடியாக உங்களின் மருத்துவரை அணுகவும்.
உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும் போது இந்த அறிகுறிகள் தோன்றும்
* கண்களுக்கு மேல் சொறி
* கைகள் மற்றும் கால்களின் தோலில் வலி உணர்வு
* விறைப்புத் தன்மை கோளாறு
* கால்கள் மற்றும் பாதங்கள் சிவப்பு அல்லது நீல நிறத்தில் காணப்படுவது
* பாதங்களில் நகம் வளராமல் இருப்பது
* மரத்துப் போவது
* பாதங்களில் சோர்வு
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | நீரழிவு நோயாளிகள் இந்த காய்கறிகளை மட்டும் தவறாமல் சாப்பிடுங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ