ஜம்மு-காஷ்மீரில் CRPF வீரர்கள் சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 18 வீரர்கள் உயரிழந்தனர்.
ஜம்மு-காஷ்மிரில் உள்ள புல்வாமா மாவட்டம் அவாந்திபோரா பகுதியில் ஸ்ரீநகர் - ஜம்மு நெடுஞ்சாலையில் CRPF வீரர்கள் வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்கள். CRPF வீரர்கள் இருபதுக்கும் மேற்பட்டோர் இரண்டு வாகனங்களில் ரோந்து பணிக்காக சென்றுள்ளனர். அப்போது பயங்கரவாதிகள் CRPF வீரர்கள் சென்ற வாகனம் மீது திடீரென வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் 18 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். வெடிகுண்டு தாக்குதலில் CRPF வாகனங்களும் சேதமடைந்துள்ளன. வாகனத்தில் அதிகமான வீரர்கள் சென்றதால் உயிர்ப்பலி அதிகமாக இருக்கும் என அஞ்சப்படுகிறது. இதனிடையே இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.
#UPDATE 12 CRPF jawans have lost their lives in an IED blast in Awantipora, Pulwama. #JammuAndKashmir pic.twitter.com/5zag4sOUnG
— ANI (@ANI) February 14, 2019
Pulwama: Dozens injured as well. Death toll is expected to rise. Two buses in the CRPF convoy were targeted in an high intensity IED blast https://t.co/JGqs15gCiA
— ANI (@ANI) February 14, 2019
12 CRPF jawans have lost their lives in an IED blast in Awantipora, Pulwama. Dozens injured. #JammuAndKashmir (visuals deferred) pic.twitter.com/bONkKeFFxt
— ANI (@ANI) February 14, 2019
Pakistan backed Jaish-e-Mohammed claims responsibility for Pulwama IED terror attack, in a text message to Kashmiri News Agency GNS. 12 jawans have lost their lives in the attack pic.twitter.com/X98efDjnrS
— ANI (@ANI) February 14, 2019