தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பீகாரில் ஆளுநராக இருக்கும் ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்பு.
இன்று நடைபெற்ற பா.ஜ.க.வின் பாராளுமன்றக் குழு கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து விவாதித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டது. பா.ஜ.க.வின் ஆட்சி மன்ற குழு கூட்டத்திற்கு பிறகு அமித் ஷா ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்தார்.
பீகாரில் ஆளுநராக இருக்கும் ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப் பட்டார். இவை உ.பி., மாநிலத்தை சேர்ந்தவர். இவர் பா.ஜக-வில் நீண்டகாலமாக பணியாற்றியவர். இவர் தலித் சமுகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. உ.பி.,யில் இருந்து இரண்டு முறை மாநிலங்கவை தலைவராக ராம்நாத் கோவிந்த் தேர்ந்தெடுக்கப் பட்டார்.