டெல்லிக்கு மாநில அந்தஸ்து கொடுத்தால் பா.ஜ.க-விற்காக பிரச்சாரம் செய்வேன் என்று அரவிந்த கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
தலைநகர் டெல்லி யூனியன் பிரதேசம் என்பதால், மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும். தனி அரசாக இருந்தாலும் யூனியன் பிரதேசங்களுக்கு, மாநிலங்களுக்கு இருக்கும் முழு அதிகாரம் இருக்காது. காவல்துறை, வருவாய்த்துறை போன்ற முக்கிய துறைகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும்!
பா.ஜ.க தனது தேர்தல் வாக்குறுதியில் டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று அறிவித்தது. ஆனால் அந்த தேர்தலில் ஆம் ஆத்மியிடம் படுதோல்வி அடைந்தது. இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
தற்போது டெல்லியின் முக்கிய துறைகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. இதனையடுத்து இது குறித்து டெல்லி சட்டபேரவையில் தீர்மானம் நேற்று நிறைவேற்றப்பட்டது. அப்போது பேசிய கெஜ்ரிவால், "2019 தேர்தலுக்கு முன்னதாக டெல்லிக்கு மாநில அந்தஸ்து கொடுத்தால் டெல்லி மக்கள் அனைவரும் பா.ஜ.க-விற்கு வாக்களிப்பார்கள். நாங்கள் உங்களுக்காக பிரச்சாரம் செய்வோம்" என்று தெயவித்துள்ளார்.