டெல்லியில் பிப்ரவரி 16 ஆம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்கு பதிவு, கடந்த 8ந்தேதி நடந்தது. இதன் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. இந்த தேர்தல் முடிவில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியை பிடித்தது. இந்த தேர்தலில் பா.ஜனதாவுக்கு 8 இடங்கள் கிடைத்தன. காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை.
அந்தவகையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களுடன் கெஜ்ரிவால் இன்று ஆலோசனை நடத்துகிறார். அவரது வீட்டில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. அப்போது கெஜ்ரிவால், கட்சியின் சட்டமன்றக் குழு தலைவராக தேர்வு செய்யப்பட உள்ளார்.
2015 தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 67 தொகுதிகளில் வெற்றி பெற்றபோது, கெஜ்ரிவால் பிப்ரவரி 14 ஆம் தேதி பதவியேற்றார். இந்நிலையில் தற்போது அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்பு விழா வரும் 16 ஆம் தேதி ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Aam Aadmi Party (AAP) chief Arvind Kejriwal to take oath as the Chief Minister of Delhi on 16th February, at Ramlila Maidan. pic.twitter.com/gABczDBoCw
— ANI (@ANI) February 12, 2020