ஃபாரூக் அப்துல்லாவிடம் மத்திய அரசு ஏன் இவ்வளவு அஞ்சுகிறது என ஒவைசிகேள்வி

காஷ்மீர் மாநிலத்தில் நிலைமை சாதாரணமானது அல்ல என்றே தோன்றுகிறது. காஷ்மீர் குறித்து பிரதமர் மோடி பொய் சொல்கிறார் என்று அசதுத்தீன் ஒவைசி கூறியுள்ளார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Sep 16, 2019, 03:38 PM IST
ஃபாரூக் அப்துல்லாவிடம் மத்திய அரசு ஏன் இவ்வளவு அஞ்சுகிறது என ஒவைசிகேள்வி title=

புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பாரூக் அப்துல்லா பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்த்திருப்பதற் AIMIM தலைவர் அசதுத்தீன் ஒவைசி கடும் எதிர்ப்பை தெரிவத்துள்ளார். "ஜம்மு-காஷ்மீரில் இருந்து 370வது பிரிவை அகற்றுவதற்கான மசோதாவைக் கொண்டு வருவதற்கு முன்பு, பிரதமர் மோடி ஃபாரூக் அப்துல்லாவுடன் உட்கார்ந்து பேசினார். ஆனால் தற்போது அப்துல்லாவிடம் இருந்து என்ன அச்சுறுத்தல் வந்துவிட்டது? இது என்ன வகையான ஆபத்து? ஒரு முன்னாள் முதல்வரைப் பார்த்து ஏன் பயப்படுகிறீர்கள் பிரதமர் மோடி? அப்படி என்றால் காஷ்மீர் மாநிலத்தில் நிலைமை சாதாரணமானது அல்ல என்றே தோன்றுகிறது. காஷ்மீர் குறித்து நீங்கள் (பிரதமர் மோடி) பொய் சொல்கிறீர்கள் என்று ஒவைசி கூறியுள்ளார்.

ஒவைசி மேலும் கூறுகையில், 'பிரிவினைவாதி மஸ்ரத் ஆலம் மற்றும் பாரூக் அப்துல்லாவை சமமாக கருதுகிறீர்கள். அவர்கள் இருவர் மீது ஒரே குற்றத்தை சுமத்தி உள்ளீர்கள். காஷ்மீரில் 100 குழந்தைகள் வசித்து வந்த இடத்தில், இப்போது 200 பேர் அங்கு வசித்து வருகின்றனர். குழந்தைகள் சித்திரவதை செய்யப்படுகிறார்கள். முன்னாள் முதல்வர்கள் தனது மாநிலத்திற்குச் செல்ல உச்சநீதிமன்றத்தில் அனுமதி கேட்க வேண்டி இருக்கிறது. ஊடகங்களுக்கு கருத்துச் சுதந்திரம் மறுக்கப்பட்டு உள்ளது.

AIMIM தலைவர் மேலும் கூறுகையில், ஃபாரூக் அப்துல்லாவை பொது பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்திருப்பதை கண்டிக்கிறேன். 80 வயதான அப்துல்லா சாஹேப் 40 நாட்களாக காவலில் அடைக்கப்பட்டுள்ளார். நீங்கள் அனைவரையும் தடுத்து வைத்துள்ளீர்கள். நாட்டில் வேலையின்மை குறித்து பாஜகவிடம் பதில் இல்லை. எனவே மக்களின் கவனத்தை பொருளாதாரத்தில் இருந்து திசை திருப்பவே பாஜக செயல்படுகிறது எனக் கடுமையாக சாடி பேசினார்.

Trending News