அசாம் தேசிய குடிமக்கள் பட்டியலில் மேலும் 1 லட்சம் பேர் நீக்கம்;

அசாமில் தேசிய குடிமக்கள் பதிவு பட்டியலில் மேலும் 1 லட்சத்துக்கு அதிகமானா பெயர்கள் நீக்கம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 26, 2019, 02:07 PM IST
அசாம் தேசிய குடிமக்கள் பட்டியலில் மேலும் 1 லட்சம் பேர் நீக்கம்;  title=

கவுகாத்தி: அசாமில் தேசிய குடிமக்கள் பதிவு பட்டியலில் இருந்து மேலும் 1 லட்சத்துக்கு அதிகமானா பெயர்கள் நீக்கப்பட்டுள்ள சம்வம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1950-களில் இருந்தே அசாமில் குடியேறியுள்ள வெளியூர் மக்களை வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வந்துள்ளது. அதற்காக தேசிய குடிமக்கள் பதிவேடு என்ற முறை கொண்டு வரப்பட்டது. வங்க தேசத்தில் இருந்து சட்ட விரோதமாக அசாமில் குடியேறுபவர்களை கண்டறிய 1951 ஆம் ஆண்டு முதல் தேசிய குடிமக்கள் பதிவு வரைவு பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியிடப்பட்ட வரைவு பட்டியல் பெரும் சர்ச்சையை கிளப்பியது. 

கடந்த ஜூலை மாத இறுதியில் அரசு வெளியிட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டில், அஸ்ஸாமில் வசிக்கும் சுமார் 3.3 கோடி பேரில் 2.9 கோடி பேரின் பெயர்கள் மட்டும் சேர்க்கப்பட்டு 40 லட்சத்திற்கும் அதிகமானோரின் பெயர்கள் விடுபட்டிருந்தது. இதன் மூலம் ஒரே நாளில் அவர்கள் பல்லாண்டுகளாக வாழ்ந்து வந்த நாட்டில் அகதிகள் ஆகும் நிலை ஏற்பட்டது.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி இறுதி தேசிய குடிமக்கள் பதிவு பட்டியல் வரும் ஜூலை 31 ம் தேதி வெளியிடப்பட உள்ளது.

இதற்கான வரைவு பட்டியல் தற்போது மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட பட்டியலில் இடம்பெற்றிருந்தவர்களில் மேலும் 1.02 லட்சம் பேரின் பெயர்கள் தகுதியற்றவை எனக் கூறி நீக்கப்பட்டுள்ளது.

தேசிய குடிமக்கள் பதிவு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் ஜூலை 11 ம் தேதி முதல் அமைக்கப்படும் உதவி மையங்கள் மூலம் தகுந்த ஆதாரங்களை சமர்பித்து பதிவு செய்வதற்கு வாய்ப்பு அளிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News