பெங்களூர் பகுதியில் சலூன் நடந்திக்கொண்டிருக்கும் ரமேஷ் பாபுவிடம் 150 வகையான பல அரிய மாடல் கார்கள் உள்ளன.
தற்போது 45 வயதாகும் ரமேஷ் பாபுவுக்கு 9 வயதாக இருந்த போது அவரின் தந்தை இறந்து விட அவரது குடும்பம் வறுமையில் வாடத்தொடங்கியது. வறுமையால் வாடிய குடும்பத்தைக் கருத்தில் கொண்டு பத்தாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு அதன் தந்தையின் தொழிலான முடி திருத்தும் வேலையை முழுநேரமாகத் தொடங்கினார்.
சிறு வயதில் இருந்தே கார்கள் மீது ரமேஷ்க்கு கொள்ள ஆசை. இதனால் சிறிது, சிறிதாக பணம் சேர்த்து 1994-ம் ஆண்டு மாருதி ஆம்னி ஒன்றை வாங்கி அதை வாடகைக்கு விட்டு சம்பாதிக்க திட்டமிட்டார். அதன் பின் மெல்ல மேலும் பல கார்களை வாங்கி, ரமேஷ் டூர்ஸ் அன்ட் டிராவல்ஸ் என்ற நிறுவனத்தைத் ஆரம்பித்தார். தற்போது ரமேஷின் டிராவல்ஸ் நிறுவனத்தில் சொகுசு கார்கள் உட்பட சுமார் 150 கார்கள் உள்ளன. இவற்றில் விலையுயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் காரும் அடக்கம்.
மறுபக்கம் சலூன் தொழிலையும் அவர் விடவில்லை. சொந்தமாக சலூன் ஒன்றையும் நடத்தி வரும் ரமேஷ் எவ்வளவு வேலைகள் இருந்தாலும் தினசரி 5 மணி நேரமாவது தன்னுடைய சலூனில் நேரத்தை செலவிடுகிறார். மேலும், தனது பழைய வாடிக்கையாளர்களுக்கு அவரே முடியும் வெட்டி விடுகிறார். நான் எப்போதும் சலூன் கடை வேலையை விடமாட்டேன்” என்கிறார் ரமேஷ்.
இந்த நிலையில், ஜெர்மனியிலிருந்து 3.2 கோடி மதிப்பிலான மெர்ச்சிடிஸ் காரொன்றை சமீபத்தில் ரமேஷ் வாங்கியிருக்கிறார். ஒரு மாதத்திற்கு முன் அவர் வாங்கிய புதிய கார், மெர்சிடிஸ் மேபக் எஸ்600 (Mercedes Maybach S600). இதன் விலை ரூ.3.2 கோடி. இந்தியாவில் இந்த கார் விற்பனைக்கு இல்லை என்பதால் ஜெர்மனியில் இருந்து வரவழைத்திருக்கிறார்.
பெங்களூரில் இதற்கு முன் விஜய் மல்லையா இந்த சொகுசுக் காரை வைத்திருந்தார். இதனால் பெங்களூரில் மெர்ச்சிடிஸ் கார் தற்போது ரமேஷிடம் மட்டுமே உள்ளது. உலகில் உள்ள அனைத்து சொகுசுக் கார்களையும் வாங்க வேண்டும் என்பதே என் ஆசை என ரமேஷ் கூறிகிறார்.