Bihar Election Result 2020: வெற்றி சான்றிதழை தர அதிகாரிகள் மறுப்பு என RJD குற்றச்சாட்டு

119 இடங்களில் வென்றுவிட்டதாகவும் தேர்தல் அதிகாரி வெற்றிச்சான்றிதழ் தர மறுப்பதாகவும் ஆர்ஜேடி தலைவர் குற்றச்சாட்டி உள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 10, 2020, 10:27 PM IST
Bihar Election Result 2020: வெற்றி சான்றிதழை தர அதிகாரிகள் மறுப்பு என RJD குற்றச்சாட்டு title=

பாட்னா: பீகார் தேர்தல் இறுதி முடிவுகள் குறித்து உண்மையான விவரங்களை வெளியிடாமல் இருக்க தேசிய ஜனநாயக கூட்டணி அரசியல் அழுத்தம் கொடுப்பதாக ராஷ்டிரிய ஜனதா தளம் (JRD) கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. தேர்தல் முடிவுகளில் குழப்பம் இருப்பதாக ஆர்ஜேடி தரப்பில் கூறப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் வெற்றி பெறும் வேட்பாளர்களுக்கு இன்னும் சான்றிதழ்கள் கூட வழங்கப்படவில்லை. இதற்கு காரணம் சுஷில் மோடியும் நிதீஷ்குமாரும் தேர்தல் நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுக்கின்றனர் எனவும் கூறியுள்ளனர். 

ஆர்ஜேடி தனது ட்விட்டர் பகக்த்தில், "நிதீஷ் நிர்வாகம் சுமார் 10 இடங்களின் எண்ணிக்கையை தாமதப்படுத்துகிறது. வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படவில்லை. முதல்வர் இல்லத்தில் உட்கார்ந்துக்கொண்டு நிதீஷ் குமார் மற்றும் சுஷில் மோடி ஆகியோர் இழுபறி தொகுதிகளின் வெற்றியை தங்களுக்கு ஆதரவாக அறிவிக்குமாறு அழுத்தம் கொடுக்கின்றனர்.

 

இந்த ட்வீட்டீல் ஒரு பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் நிதீஷ் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்.ஜே.டி கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.

 

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News