Shorts-ல் விநாயகர் படம், சர்ச்சையில் சிக்கிய விளம்பரம், மன்னிப்பு கோரிய நிறுவனம்: நடந்தது என்ன!

விளம்பரம் வந்தவுடன் நிறுவனத்தின் மீதான எதிர்ப்பு தொடங்கியது. பிரேசிலில் வசிக்கும் இந்தியர்கள், மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம் சாட்டி, விளம்பரத்தை உடனடியாக ரத்து செய்யுமாறு கோரினர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 25, 2020, 02:25 PM IST
  • விநாயகரின் புகைப்படத்தைப் பயன்படுத்திய சர்ச்சைக்குரிய விளம்பரத்தை பிரேசில் நிறுவனம் நீக்கியுள்ளது.
  • சர்ச்சையை அடுத்து, பிரேசிலுக்கான இந்திய தூதர் சுரேஷ் ரெட்டி நிறுவனத்துடன் பேசினார்.
  • மத உணர்வுகளை புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கோருகிறோம்-நிறுவனம்.
Shorts-ல் விநாயகர் படம், சர்ச்சையில் சிக்கிய விளம்பரம், மன்னிப்பு கோரிய நிறுவனம்: நடந்தது என்ன!  title=

ரியோ டி ஜெனிரோ: இந்து கடவுளான விநாயகரின் புகைப்படத்தைப் பயன்படுத்திய சர்ச்சைக்குரிய விளம்பரத்தை பிரேசில் நிறுவனம் நீக்கியுள்ளது. இந்த விளம்பரத்தில், பெண் மற்றும் ஆண் மாடல்கள் விநாயகரின் படம் போட்ட ஷார்ட்சுகளை அணிந்திருந்தனர்.

சர்ச்சைக்குப் பிறகு எடுக்கப்பட்ட முடிவு

விளம்பரம் வந்தவுடன் நிறுவனத்தின் மீதான எதிர்ப்பு தொடங்கியது. பிரேசிலில் (Brazil) வசிக்கும் இந்தியர்கள், மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம் சாட்டி, விளம்பரத்தை உடனடியாக ரத்து செய்யுமாறு கோரினர். மக்களிடமிருந்து பெரும் எதிர்ப்பைக் கண்ட பின்னர், நிறுவனம் வேறு வழியில்லாமல், இறுதியாக விளம்பரத்தை அகற்றிவிட்டது.

ALSO READ: மீண்டும் டிரெண்டாகும் #BoycottTanishq ஹேஷ்டேக்… தீபாவளி விளம்பரம் ஏற்படுத்திய சர்ச்சை என்ன?

வருத்தம் தெரிவிக்கப்பட்டது

ஜான் கோட்ரே நிறுவனத்தின் சாவ் பாலோவில் உள்ள அலுவலகம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. சர்ச்சைக்குரிய விளம்பரம் நிறுவனத்தின் வலைத்தளத்திலிருந்து (Website) அகற்றப்பட்டுள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விநாயகர் படம் அச்சிடப்பட்ட ஷார்ட்சுகளின் உற்பத்தியும் நிறுத்தப்பட்டுள்ளது. நடந்த தவறுக்கு மன்னிப்பு கோருவதாக நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். எங்கள் நோக்கம் மத உணர்வுகளை புண்படுத்தவோ அல்லது யாரையும் புண்படுத்தவோ அல்ல என்று அவர் நிறுவனத்தின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார்.

இந்திய தூதர் பேசினார்

சர்ச்சையை அடுத்து, பிரேசிலுக்கான இந்திய தூதர் (Indian Ambassador) சுரேஷ் ரெட்டி நிறுவனத்துடன் பேசினார். பிரச்சினையின் உணர்திறன் குறித்து அவருக்கு அறிவித்தார். அதன் பிறகு நிறுவனம் உடனடியாக நடவடிக்கை எடுத்தது. விளம்பரங்களை தடைசெய்து, அனைத்து கடைகளிலிருந்தும் விநாயகர் உருவம் அச்சிடப்பட்டிருந்த ஷார்ட்சுகளை திரும்பப் பெற்றது.

இது போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும்

அமெரிக்காவில் (America) வசிக்கும் இந்து மதத் தலைவர் ராஜன் செட், விநாயகரின் உருவப்படம் பதித்த ஷார்ட்சுகளை உற்பத்தி செய்ததற்காக அந்த நிறுவனத்தை விமர்சித்தார். இதுபோன்ற முயற்சிகள் மத உணர்வுகளை புண்படுத்தும் என்றும் நிறுவனங்கள் இதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

ALSO READ: Twitter-ல் trend ஆகிறது #BoycottAmazon: காரணம் என்ன தெரியுமா….

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News