மகாராஷ்டிரா: தடைகளை மீறி காளை சண்டை நடத்திய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!
மகாராஷ்டிரா மாநிலத்தில் காளைகளை வைத்து பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்த கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வாடாவின் மங்காத்தேன் கிராமத்தில் காளைகள் சண்டை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து நிகழ்ச்சியின் அமைப்பாளர் கூறுகையில்; இது பொழுதுபோக்கிற்காக மட்டும் தான். வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இங்கு காளை சண்டை ஏற்பாடு செய்யப்படுகின்றது.
It's just for entertainment. Bull fight organised only once a yr. We condemn this ban & request govt to intervene in this matter: Organiser pic.twitter.com/5Mzg7jIvJv
— ANI (@ANI) October 20, 2017
நீதிமன்றம் விடுத்துள்ள இந்தத் தடையை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம், அரசாங்கம் இந்த விஷயத்தில் தலையிட்டு எங்கள் கோரிக்கை நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம், என தெரிவித்தார்!