ஷெல் கம்பெனி மூலம் ஆம் ஆத்மி கட்சிக்கு ரூ .2 கோடி நன்கொடை அளித்த தொழிலதிபர் முகேஷ்குமாரை டெல்லி போலீசார் கைது செய்தனர்
அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு ஷெல் கம்பெனி மூலம் ரூ .2 கோடி நன்கொடை அளித்ததாக டெல்லி காவல்துறையின் பொருளாதார குற்ற பிரிவு இருவரை கைது செய்துள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 21, 2020) தெரிவித்துள்ளன.
டெல்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் முகேஷ்குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மற்றொருவர் சுதான்ஷு பன்சால் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
2014 மார்ச் 31, அன்று டிமாண்ட் ட்ராஃப்ட் மூலம் முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவாலின் கட்சிக்கு பணத்தை நன்கொடையளித்த குற்றச்சாட்டில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முகேஷ் சர்மா டெல்லியைச் சேர்ந்த ப்ராபர்டி டீலர் மற்றும் புகையிலை வர்த்தகர் ஆவார்.
முன்னர் தில்லி அமைச்சராக இருந்த, கபில் மிஷ்ரா, ஷெல் கம்பெனி மூலம் ஆம் ஆத்மி கட்சி நன்கொடை பெற்றதாக குற்றம் சாட்டியிருந்தார். அவர் ஆம் ஆத்மி கட்சியில் இருந்தார். அவர் தற்போது பாஜகவில் உள்ளார்.
ஆம் ஆத்மி கட்சி பெற்ற நன்கொடையில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததாகவும் மிஸ்ரா குற்றம் சாட்டியதோடு, சந்தேகத்திற்கிடமான வகையில் பெறப்பட்டுள்ள ரூ .2 கோடி நன்கொடை குறித்து. கேள்விகளை எழுப்பினார்.
பல ஷெல் நிறுவனங்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு பணம் கொடுத்ததாகவும், அது கட்சிக்குத் நன்றாகவே தெரியும் என்றும் அவர் கூறியிருந்தார்.
‘தலைமறைவாக’ உள்ள மருத்துவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்… மகாராஷ்டிரா சுகாதாரத் துறை..!!!