மார்ச் 13 முதல் சேமிப்புகணக்கிலிருந்து வாரம் ரூ.50,000 எடுக்கலாம்

Last Updated : Feb 20, 2017, 04:12 PM IST
மார்ச் 13 முதல் சேமிப்புகணக்கிலிருந்து வாரம் ரூ.50,000 எடுக்கலாம்

கடந்த நவம்பர் 8ம் தேதி பிரதமர் மோடி பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். இந்த நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான ஏடிஎம் மையங்கள் செயல்படாமல் முடங்கின. புதிய 2000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களை விநியோகம் செய்யும் அளவுக்கு ஏடிஎம் மெஷின்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டன.

அதுவும் நாள் ஒன்றுக்கு 2000 ரூபாய் வரை மட்டுமே எடுக்க ரிசர்வ் வங்கி அனுமதி அளித்தது. பின்னர் அது ரூ.2500, ரூ.4500 என படிப்படியாக உயர்த்தப்பட்டது. கடந்த மாதம்(ஜனவரி17) முதல் தினமும் நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை ஏ.டி.எம்.களில் பணம் எடுக்கலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதேபோல் நடப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் வாரத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் வரை எடுக்க முடியும் என்ற நிலையில் இருந்து ஒரு லட்சமாக உயர்த்தப்பட்டது.

இந்நிலையில், தற்போது பணத்தட்டுப்பாடு ஒரளவு சீரடைந்ததையடுத்து பணம் எடுப்பதற்கான உச்ச வரம்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சேமிப்பு கணக்கிலிருந்து வாரம் அதிகபட்சமாக ரூ.50,000 வரை எடுத்துக்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி சலுகை வழங்கியுள்ளது. மார்ச் 13-ம் தேதி முதல் இந்த சலுகை அமலுக்கு வரும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 

More Stories

Trending News