காவிரி நீர் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் நாளை தீர்ப்பு!

காவிரி நீர் பங்கிடுவது தொடர்பாக, தமிழகம் மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநிலங்கள் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், சுப்ரீம் கோர்ட் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது.

Last Updated : Feb 15, 2018, 02:13 PM IST
காவிரி நீர் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் நாளை தீர்ப்பு! title=

காவிரி நீர் பங்கிடுவது தொடர்பாக, தமிழகம் மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநிலங்கள் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், சுப்ரீம் கோர்ட் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது.

தமிழகம் மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநிலங்கள் இடையில், காவிரி நீரை பங்கிடுவது தொடர்பாக, 2007ல், காவிரி நதிநீர் தீர்ப்பாயம் அளித்த இடைக்கால தீர்ப்பை எதிர்த்து, இம்மாநிலங்கள் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தன.

இந்த வழக்கினை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது. இந்த வழக்கில் விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கில் நாளை (பிப் 16) தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது.

Trending News