சத்தீஸ்கர் சட்டமன்ற தேர்தல் 2018: 10 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நிறைவு

சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 தொகுதிக்கான முதற்கட்ட தேர்தலில் 10 தொகுதிக்கு வாக்குபதிவு 3 மணியுடன் நிறைவடைந்தது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 12, 2018, 05:55 PM IST
சத்தீஸ்கர் சட்டமன்ற தேர்தல் 2018: 10 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நிறைவு title=

சத்தீஸ்கர் மாநிலம் உள்பட, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல், இம்மாதத்தில் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் 90 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் முதற்கட்டமாக 18 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றது.

பஸ்தார், பிஜப்பூர், தண்டேலாடா உள்பட நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த மாவட்டங்களில் தேர்தல் நடப்பதால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 10 தொகுதிகளுக்கு காலை 7 முதல் 3 மணி வரையும், எட்டு தொகுதிகளுக்கு காலை 8 மணி முதல் 5 மணி வரையும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 சட்டசபை தொகுதிகளுக்கு மதியம் 1 மணி வரை 25.15 சதவீத வாக்குகள் பதிவாகின. மதியத்திற்கு பிறகு வாக்கு சதவீதம் திடீரென அதிகரித்தது, நண்பகல் 3.00 மணி 47.18% வாக்குகள் பதிவாகின. மாலை 4.30 மணி வரை 56.58% வாக்குகள் பதிவாகி சாதனை செய்துள்ளது.

காலை 7 மணிக்கு தொடங்கிய 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குபதிவு நண்பகல் 3 மணியுடன் முடிவடைந்தது. தற்போது மீதமுள்ள எட்டு தொகுதிகளுக்கான வாக்குபதிவு மாலை 5 மணி வரை நடைபெறும்.

Trending News