நிர்பயா-விற்கு உண்மையில் நீதி கிடைத்ததா?

நாட்டை உலுக்கிய இச்சம்பவம் தற்போது யார் நினைவில் இருக்கிறது?...

Last Updated : Dec 16, 2017, 04:24 PM IST
நிர்பயா-விற்கு உண்மையில் நீதி கிடைத்ததா? title=

ஐந்து வருடங்கள் முடிந்துவிட்டது... டிச.,16 2012, தலைநகர் டெல்லியில் 23 வயது இளம்பெண் கூட்டு வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டார்.

நாட்டை உலுக்கிய இச்சம்பவம் தற்போது யார் நினைவில் இருக்கிறது?. உன்மையில் டெல்லி பெண்கள் வாழ்வதற்கான இடம் தானா? என்ற கேள்வி மனதில் எழுகிறது.

சரி உங்களுக்கு நினைவிருக்கிறதா?... யார் அந்த இளம்பெண்? என்ன சம்பவமென்று,.

2012-ஆம் ஆண்டு, டிசம்பர் 16-ஆம் நாள், தன் நண்பருடன் இளம்பெண் ஒருவர், டெல்லி பேருந்தில் பயணித்தபோது தான் இந்த கொடுமை நடந்தது.

அப்பேருந்தின் ஓட்டுநர் உள்பட ஐந்து பேர் கொண்ட குழு அந்த இளம்பெண் கூட்டு வன்புணர்வுக்கு ஆளாக்கினர். அவருடன் பயணித்த அவரது நண்பரையும் மோசமாகத் தாக்கினர். உயிருக்கு போராடும் நிலையில், ஆடைகளின்றி, ரத்தம் வழிய இருவரையும் சாலையில் தூக்கி வீசி சென்றனர்.

அந்த சாலையில் சென்ற சில நல்லுள்ளங்கள் இருவரையும் காப்பாற்றும் முயற்சியாய் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். காவல்துறைக்கும் தகவல் அளித்தனர்.

இந்த முயற்சியில் அப் பெண்னின் நண்பர் காப்பாற்றப்பட்டார், ஆனால் அவரை காப்பாற்ற முடியவில்லை. இந்தியாவை உலுக்கிய இச்சம்பவத்தில் உயிரிழந்த அப்பெண்னுக்கு இந்திய ஊடகங்கள் நிர்பயா(பயமற்ற பெண்) என பெயர் சூட்டினர்.

இந்த கொடூர சம்பவத்தில் குற்றவாளிகளாக முகேஷ், பவன்குமார் குப்தா, வினாய் ஷர்மா, அக்ஷய் குமார், ராம்சிங் ஆகியே 5 பேருக்கும் உயர்நீதி மன்றம் தூக்கு தண்டனை விதித்தது. தீர்ப்பின் பின்னர் திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் ராம்சிங் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். மீதமுள்ள நால்வருக்கு தூக்கு காத்திருக்கிறது.

இந்நிலையில் வினாய் ஷர்மா, பவன்குமார் குப்தா ஆகிய இருவரும் தீர்ப்பை எதிர்த்து கடந்த டிச., 12-ம் நாள் உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளனர். வரும் ஜனவரி 22-ம் நாள் இந்த மனு விசாரணைக்கு வரும் என தெரிகிறது.

5 வருடங்கள் கழித்தும், நிர்பயாவிற்கு நியாயம் கிடைக்க வில்லை. இந்நிலையில் அக்குற்றவாளிகள் மறுசீராய்வு மனு அளித்திருப்பது பெரும் அதிர்சியை ஏற்படுத்துகிறது. ஒருவேலை இக்குற்றவாளிகள் தப்பித்துவிட்டல் பின்னர், சட்டம் நீதி மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை அடியோடு அழிந்துவிடும்...

இதுகுறித்து நிர்பயா-வின் தாயார், குற்றவாளிகள் ஏன் இன்னும் தூக்கிலிடப்படவில்லை, சாமானியர்களுக்கு சட்டம் ஒரு எட்டா கனிதான், இதையெல்லாம் தகற்கும் வகையினில் புதிய சட்டம் கொண்டுவரப் படவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

அவரின் கேள்வி நியாம்தான், நிர்பயா ஏன் கொல்லப்பட்டார் என விவாதம் செய்ய தெரிந்தவர்களுக்கு, அந்த வழக்கின் குற்றவாளிகளை ஏன் தண்டிக்கவில்லை என விவாதம் நடத்த தெரியவில்லை... எப்படி கேட்பார்கள்; நம் மக்களையும், நியாபக மறதி வியாதியையும் தான் பிரிக்க முடிவதில்லையே....

Trending News