அரசுமுறைப் பயணமாக உள்துறை அமைச்சர் அமித்ஷா J&K வருகை!!

அமித் ஷாவின் ஜம்மு காஷ்மீர் வருகைக்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் புல்வாமாவில் என்கவுண்டரை நிறுத்தினர்!!

Last Updated : Jun 26, 2019, 09:34 AM IST
அரசுமுறைப் பயணமாக உள்துறை அமைச்சர் அமித்ஷா J&K வருகை!! title=

அமித் ஷாவின் ஜம்மு காஷ்மீர் வருகைக்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் புல்வாமாவில் என்கவுண்டரை நிறுத்தினர்!!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இன்று காஷ்மீர் செல்கிறார். அங்கு அவர் அமர்நாத் யாத்திரைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், எல்லை பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்க உள்ளார்.

ஸ்ரீநகரில் உள்ள ராணுவ தலைமையகத்தில் நடைபெறும் உயர் பாதுகாப்பு ஆய்வு நிகழ்ச்சியிலும் அமித் ஷா பங்கேற்க உள்ளார் . ஆளுநர் சத்யபால் மாலிக்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அமர்நாத் யாத்ரீகர்களுக்கு உரிய பாதுகாப்பும் அடிப்படை வசதிகளையும் செய்து தருமாறு அமித் ஷா வலியுறுத்துவார். 

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தின் டிரால் பகுதியில் இன்று அதிகாலை பாதுகாப்பு படையினரும் பயங்கரவாதிகளும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநிலத்தின் பாதுகாப்பு நிலைமைகளை அறிந்து கொள்வதற்காக ஸ்ரீநகரில் தரையிறங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னரே இந்த தாக்குதல் நடைபெற்றது. 

பாதுகாப்புப் படையினரின் கூட்டுக் குழு, டிராலில் உள்ள காடுகளில் இரண்டு முதல் மூன்று பயங்கரவாதிகளைத் வீழ்த்தினர், துப்பாக்கிச் சூடு பரிமாறிக்கொண்டதாகக் கூறப்படுகிறது. தப்பிக்கும் முயற்சியில் வனப்பகுதிக்கு தப்பி ஓடிய பயங்கரவாதிகளை பாதுகாப்பு அதிகாரிகள் சுற்றி வளைத்துள்ளனர். 

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு நிலைமையை மதிப்பிடுவதற்காக ஷா ஸ்ரீநகரில் ஒரு உயர்மட்டக் கூட்டத்தை நடத்தவிருந்த ஒரு நாளில் அது ஏற்பட்டது. ஷாவும், பாஜக அரசாங்கமும் பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையை பலமுறை எடுத்துரைத்து, இந்தியாவின் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் எந்தவொரு தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகளுக்கும் பதிலளிப்பதாக உறுதியளித்துள்ளனர்.

 

Trending News