ஒடிசா "ஷாப்பிங் வளாகத்தில்" தீ விபத்து!

ஒடிசாவில் உள்ள ஷாப்பிங் வளாகத்தில் தீடிரென தீ விபத்து ஏற்பட்டது.  

Last Updated : Feb 4, 2018, 02:56 PM IST
ஒடிசா "ஷாப்பிங் வளாகத்தில்" தீ விபத்து! title=

ஒடிசாவில் கட்டாக்கின் சிட்டி ஸ்டைல் ​​என்ற ஆடைகளுக்கான பிரபல தனியார் ஷாப்பிங் வளாகம் ஒன்று உள்ளது. அந்த ஷாப்பிங் வளாகதில் தற்போது தீடிரென ஏற்பட்ட தீ விபத்தில் 5-க்கும் மேற்பட்ட கடைகள் தீப்பிடித்துள்ளன.   

தொடர்ந்து புகை வெளியேறிக்கொண்டிருப்பதால், தீ விபத்து ஏற்பட்டுள்ள ஷாப்பிங் வளாகம் அமைந்துள்ள பகுதி அபாயகரமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தீயை அணைக்க தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் 7-க்கும் மேற்பட்ட  தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். ஆனால் ஐந்து மணி நேரமாக போராடியும் தீயை அணைக்க முடியவில்லை. தீ விபத்தால் ஏற்பட்ட வெப்பம் காரணமாக, கடையில் வைக்கப்பட்டிருந்த கண்ணாடிகள் வெடித்துச் சிதறி வருகின்றன.

தற்போது வரை இந்த தீ விபத்தில் எவ்வித உயிரிழந்போ, காயமோ யாருக்கும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. 

 

 

 

 

 

 

 

 

Trending News