கர்நாடகத்தில் மாநில முன்னாள் முதல்வர் தரம் சிங் மாரடைப்பால் இன்று காலமானார்.
இவர் கர்நாடகா மாநிலத்தின் 17-வது முதல்வராக முதல்-மந்திரியாக பதவி வகித்தார்.
மேலும் கார்நாடகா சட்டமன்றத்திற்கு 1978-ம் முதல் 2008-ம் ஆண்டுவரை தொடர்ச்சியாக ஏழு முறைதேர்ந்தெடுக்கப்பட்ட இவர் தேவராஜ் அர்ஸ், குண்டுராவ், பங்காரப்பா, வீரப்பமொய்லி, எஸ்.எம்.கிருஷ்ணா ஆகியோர் மந்திரி சபையில் மந்திரியாக பதவி வகித்துள்ளார்.
2008-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்த அவர் அதன்பின் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பிடார் மக்களவை உறுப்பினராக தெர்ந்தெடுக்கப்பட்டார்.
80 வயதான இவர் இன்று காலை திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தார். திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் மரணமடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.