ஆந்திராவில் முழு அடைப்பு போராட்டம்

Last Updated : Aug 2, 2016, 12:36 PM IST
ஆந்திராவில் முழு அடைப்பு போராட்டம் title=

ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கக்கோரி முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

ஒருங்கிணைந்த ஆந்திராவில் இருந்து தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்பட்டு ஓராண்டு கடந்துவிட்டது. இதனிடையே ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பார்லிமென்டிலும் ஆந்திர எம்.பி.,க்கள் வலியுறுத்தினர். 

இதற்கு பதிலளித்து பேசிய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியதாவது:- ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது தொடர்பாக ஆந்திர மறுசீரமைப்பு சட்டத்தில் வாக்குறுதி அளிக்கப்படவில்லை என்றும், தேவையான நிதி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். இதனால் கடும் அதிருப்தி அடைந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தன.

இதனையடுத்து இன்று ஆந்திரா முழுவதும் சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கக்கோரி முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. முழு அடைப்பு போராட்டத்தால் ஆந்திராவில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பஸ்களும் இயக்கப்படவில்லை. இதனால் சாலைகள் வெறிச்சோடி  காணப்பட்டன. மறியல்-போராட்டத்தால் ஆந்திராவில் பதட்டமான சூழ்நிலை நிலவியது.

Trending News