பாலியல் பலாத்கார குற்றவாளிக்கு பொதுதூக்கு... கோவா MLA!

இந்திய கற்பழிப்புச் சட்டத்தை பாராளுமன்றத்தால் திருத்தி, 'பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை செய்தவர்களுக்கு தண்டனையாக பொது தூக்கு வழங்க வேண்டும் என கோவா அமைச்சர் மைக்கேல் தெரிவித்துள்ளார்!

Updated: Dec 7, 2019, 03:20 PM IST
பாலியல் பலாத்கார குற்றவாளிக்கு பொதுதூக்கு... கோவா MLA!

இந்திய கற்பழிப்புச் சட்டத்தை பாராளுமன்றத்தால் திருத்தி, 'பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை செய்தவர்களுக்கு தண்டனையாக பொது தூக்கு வழங்க வேண்டும் என கோவா அமைச்சர் மைக்கேல் தெரிவித்துள்ளார்!

தெலுங்கானா கால்நடை மருத்துவர் படுகொலை மற்றும் உத்தரபிரதேசத்தின் உன்னாவோவில் 24 வயது இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட விவாகாரங்களை அடுத்து நாடு தழுவிய சீற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த சீற்றத்திற்கு மத்தியில் அவர் தனது கருத்துகளை தெரிவித்துள்ளார்

இதுகுறித்து மேலும் அவர் தெரிவிக்கையில்., "கற்பழிப்பு மற்றும் கொலை வழக்குகளுக்கு விரைவான நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டிருப்பதைக் காண IPC-யில் பாராளுமன்றத்தில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும், நான்கு மாத காலத்திற்குள் நீதி வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும் இதுபோன்ற வழக்குகளில் ஒரு தீர்ப்பிற்கு ஒதுக்கப்பட்ட அதிகபட்ச நேரம் ஐந்து மாதங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும், பிரிட்டிஷ் ஆட்சியின் போது இந்தியாவில் சில இடங்களில் இருந்தும், இன்னும் சில இடங்களில் சர்வதேச அளவில் செய்யப்பட்டு வந்த பொது தூக்கு இந்தியாவில் நடைமுறை படுத்தவேண்டும்,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வியாழக்கிழமை காலை நீதிமன்ற விசாரணைக்குச் சென்று கொண்டிருந்தபோது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டவர்களால் தீக்குளித்த உன்னாவ் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான இளம்பெண் வெள்ளிக்கிழமை இரவு 11:40 மணிக்கு இறந்ததை அடுத்து பாஜக தலைவரின் கருத்துக்கள் வந்துள்ளன.

இதுபோன்ற மனப்பான்மை கொண்ட குற்றவாளிகள் மற்றும் பிறருக்கு ஒரு வலுவான செய்தியை அனுப்ப இதுபோன்ற மரணதண்டனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

2012 டெல்லி கூட்டு பாலியல் பலாத்கார சம்பவத்தின் குற்றவாளிகள் குறித்து அவர் மேலும் கூறுகையில், "ஒரு குற்றவாளியைத் தூக்கிலிட நாம் பல ஆண்டுகளாகக் காத்திருக்கிறோம், அவர் அரசாங்கத்தின் அல்லது பொதுக் கருவூலத்தின் விலையில் உணவு சாப்பிடுகிறார். பொதுமக்கள் அவரது உணவுக்காக பணம் செலுத்துகிறார்கள். இதனால் தான் இந்தியாவில் கற்பழிப்பு வழக்குகள் அதிகரித்துள்ளன." என தெரிவித்துள்ளார்.

உன்னாவ் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான இளம்பெண் அவரை பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் உட்பட ஐந்து பேரால் தீக்கு இறையாக்கப்பட்டார். உத்திரபிரதேசத்தில் கடந்த வியாழக்கிழமை நடந்த இச்சம்பவத்திற்கு பிறகு அவர் சிகிச்சைக்காக டெல்லிக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டார் மற்றும் நகர மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது மாரடைப்பு காரணமாக இறந்தார்.

பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வாத்ரா சனிக்கிழமை உன்னாவோவுக்கு விரைந்தார். மாநில அரசாங்கத்தின் நிலைப்பாட்டை சாடிய அவர், பாதிக்கப்பட்டவரை பாதுகாப்பாக வைத்திருக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாதது குறித்தும் கேள்வி எழுப்பினார். 

உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும் சமாஜ்வாடி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் மாநில பாஜக அரசு பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.  இதனிடையே முதல்வர் யோகி ஆதித்யநாத், உன்னாவோ சம்பவம் “மிகவும் வருத்தமாக இருக்கிறது”, இந்த வழக்கு விரைவான நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றும், கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.