குஜராத் காங். எம்.எல்.ஏ.க்கள் ரூ.15 கோடிக்கு விலை பேசினர்!!

Last Updated : Jul 31, 2017, 08:59 AM IST
குஜராத் காங். எம்.எல்.ஏ.க்கள் ரூ.15 கோடிக்கு விலை பேசினர்!! title=

குஜராத் மாநில மக்கள் கடும் வெள்ளத்தில் சிக்கி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் குஜராத் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 44 பேர் பெங்களூரு சொகுசு விடுதியில் தங்கியுள்ளனர்.

தொடர் கனமழை மற்றும் வெள்ளப் பாதிப்புகளால் குஜராத் மாநிலத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் மாநிலங்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பாஜக-வுக்கு தாவாமல் இருக்க அந்தக் கட்சி எம்.எல்.ஏ.க்கள் பெங்களூருவில் உள்ள சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

பெங்களூரு சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ள குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நேற்று பத்திரிகையாளர்கள் முன்பு அணிவகுத்தனர். அப்போது தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 42 பேரை தலா ரூ.15 கோடிக்கு பாஜக விலை பேசியதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குற்றம்சாட்டினார்.

குஜராத்தில் ராஜ்யசபா தேர்தலில் யாரை வெற்றி பெற செய்வது என்ற அரசியல் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் பெங்களூருவில் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

இதனால் குஜராத்தில் காங்கிரசை உடைக்க பாஜக முயற்சி செய்வதாக புகார் எழுந்தது. இதற்கிடையில் நேற்று மூத்த காங்., எம்.எல்.ஏ., சக்திசிங் கோகில் நிருபர்களிடம் பேசுகையில் கூறியதாவது:

காங்கிரசை உடைக்க பாஜக பெரும் முயற்சி மேற்கொண்டுள்ளது. ஒரு எம்.எல்.ஏ.,வுக்கு ரூ. 15 கோடி தருவதாக பேரம் பேசினர். நாங்கள் ஜனநாயகத்தை காத்திட முயற்சிக்கிறோம். இவ்வாறு அவர் கூறியிருப்பது குஜராத் அரசியலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending News