மனைவியின் பாஸ்போர்ட் தொலைந்துவிட்டதால் தனியாக ஹனிமூன் சென்ற கணவருக்கு மத்திய வெளியுறத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் உடனடியாக உதவ முன் வந்துள்ளார்.பைசான் பட்டேல் என்பவர் தனது டுவிட்டரில் பக்கத்தில்:- எனது மனைவி பாஸ்போர்ட்டை தொலைத்துவிட்டதால் துருக்கி ஏர்லைன்சில் நான் தனியாகவே பயணிக்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் எனது மனைவி போட்டோவை பக்கத்து சீட்டில் வைத்தபடி, இப்படித்தான் மனைவியோடு டிராவல் செய்கிறேன் என்ற ஒரு போட்டோவையும், டிவிட்டரில் வெளியிட்டு அதை வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், வெளியுறவு அமைச்சக டுவிட்டர் ஹேண்டில்களுடன் டேக் செய்தார்.
இதனை உடனடியாக் பார்த்த சுஷ்மா சுவராஜ் பைசான் பட்டேலுக்கு உடனே பதில் அளித்த அவர்:- உங்கள் மனைவியை என்னை தொடர்பு கொள்ள செய்யுங்கள். உங்கள் பக்கத்து சீட்டில் மனைவியை அமரச் செய்கிறேன் என்று அதில் கூறியிருந்தார் மேலும், டூப்ளிகேட் பாஸ்போர்ட் ஏற்பாடு செய்துள்ளதாக மற்றொரு டிவிட்டிலும் சுஷ்மா தெரிவித்துள்ளார்.
இதனை எதிர்பார்க்காத பைசான் பட்டேல், உடனே சுஷ்மா சுவராஜிக்கு பாராட்டு தெரிவித்தார். அதில் உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை என சுஷ்மா சுவராஜை டுவிட்டரில் புகழ்ந்துள்ளார்.
My office has reached you already. You will get a duplicate Passport tomorrow. @faizanpatel https://t.co/FV6BisvqgP
— Sushma Swaraj (@SushmaSwaraj) August 8, 2016
Ask your wife to contact me. I will ensure that she is with you on the next seat. pic.twitter.com/sktnOMkg0a @faizanpatel
— Sushma Swaraj (@SushmaSwaraj) August 8, 2016
This is how I am travelling with my wife as of now. @SushmaSwaraj @MEAIndia @MEAQuery pic.twitter.com/igeSwcfWkZ
— Faizan Patel (@faizanpatel) August 8, 2016