அருண் ஜெட்லியை சந்தித்து பிறகு தான் நாட்டை விட்டு வெளியேறினேன் :விஜய் மல்லையா

நான் நாட்டை விட்டு வெளியேறும் முன்பு பலமுறை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்தேன் என தொழில் அதிபர் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.

ZEE Web Team (Tamil) ZEE Web Team (தமிழ்) | Updated: Sep 12, 2018, 07:27 PM IST
அருண் ஜெட்லியை சந்தித்து பிறகு தான் நாட்டை விட்டு வெளியேறினேன் :விஜய் மல்லையா
Pic Courtesy : @DNA

பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, இந்திய வங்கிகளிடம் ஆயிரக்கணக்கான கோடி (ரூ. 9,000) கடனை பெற்றுவிட்டு அதை திருப்பிச் செலுத்தாமல், லண்டனில் தஞ்சம் அடைந்துள்ளார். வங்கிகளுக்கு தர வேண்டிய பாக்கியை வட்டியுடன் விஜய் மல்லையா செலுத்தியே தீர வேண்டும் என்று கர்நாடகாவில் உள்ள கடன் மீட்பு தீர்ப்பாயம் உத்தரவிட்டது. 

இதன் படி, விஜய் மல்லையாவிடம் ரூ.10 ஆயிரம் கோடி பாக்கியை வசூலித்து தரும்படியும், விஜய் மல்லையாவை இந்தியா கொண்டு வந்து விசாரிக்க வேண்டும் எனவும் 13 இந்திய வங்கிகள் மற்றும் மத்திய அரசு சார்பில் இங்கிலாந்து ஐகோர்ட்டின் வணிக கோர்ட்டில் வழக்கு தொடர்ப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், விஜய் மல்லையாவை இந்தியா கொண்டு சென்றால், எங்கு, எந்தமாதிரியான சிறையில் வைக்கப்படுவீர்கள் என்று கேள்வி எழுப்பியது. பின்னர் மும்பை ஆர்தர் சாலை சிறையின் வீடியோவை இந்தியா சார்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இதனையடுத்து மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது விஜய் மல்லையா ஆஜரானார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, 

ஜெனீவாவில் நடைபெறும் ஒரு கூட்டத்தில் பங்கேற்க இருந்ததால், நாட்டை விட்டு வெளியேறும் முன் நிதி மந்திரி அருண் ஜெட்லியை பல முறை சந்தித்து, நிலைமையை சரிசெய்ய முயற்சித்தேன். வங்கிகளுடன் சமரசம் செய்ய தயார் என திரும்பத் திரும்பச் சொன்னேன். இது தான் உண்மை என்று கூறினார்.

 

இந்தியா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மும்பை ஆர்தர் சாலை சிறையின் வீடியோவை குறித்து, எனக்கு தெரியும் இந்திய சிறைசாலைகளில் நிலைமை மனிதாபிமானமற்றது. மேலும் விவரங்களை கூற மறுத்துவிட்டார்.