இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவ் மரண தண்டனையை நிறைவேற்ற சர்வதேச நீதிமன்றம் பாகிஸ்தானுக்கு தடை விதித்துள்ளது.
இந்திய முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூஷண் ஜாதவ் தங்கள் நாட்டில் உளவு பார்த்ததாக கூறி பாகிஸ்தான் பாதுகாப்பு துறை தொடர்ந்த வழக்கில் அந்நாட்டின் ராணுவ கோர்ட்டு கடந்த சில வாரங்களுக்கு முன் அவருக்கு மரண தண்டனை விதித்தது. பாகிஸ்தானின் இந்த செயலை இந்தியாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.
குல்பூஷன் ஜாதவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து இந்திய தரப்பில் மேல்முறையீடும் செய்யப்பட்டது. இதற்கிடையில், ஜாதவ் விவகாரம் தொடர்பாக இந்திய அரசு சர்வ தேச நீதிமன்றத்தில் முறையிட்டது.
மரண தண்டனையை ரத்து செய்ய இந்தியா கோரிய மனுவை ஆய்வு செய்த சர்வதேச நீதிமன்றம் ஜாதவிற்கு பாகிஸ்தான் நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.