சீன ராணுவத்தினர் இந்திய எல்லையில் உளவு வேலை பார்ப்பதாஅக இரு நாட்களுக்கு முன்னால் உளவு துறை எச்சரித்தது. அந்நிலையில், சிக்கிமில் உள்ள எல்லை பகுதியில் சீன மேற்கொண்ட ஊடுருவல் முயற்சியை இந்திய ராணுவம் (Indian Army) முறியடித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த வாரம் வடக்கு சிக்கிமின் (Sikkim) நாகுலா பகுதியில் சீன ராணுவத்தினர் ஊடுருவினர் என்றும் அப்போது அவர்களின் ஊடுருவலை இந்திய ராணுவத்தினர் முறியடித்தனர் என்றும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் சீன வீரர்கள் 20 பேர் காயமடைந்தனர். இந்திய தரப்பில் 4 வீரர்களுக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
வடக்கு சிக்கிமில் மிக மோசமான வானிலை நிலவி வரும் அந்த கடினமான சூழ்நிலையிலும் சீனாவின் (China) ஊடுருவலை இந்தியா முறியடித்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சிக்கிமில் பதற்றம் உள்ள நிலையிலும், நிலைமை கட்டுக்குள் இருக்கிறது என ராணுவம் தெரிவித்தது.
இந்திய- சீன எல்லையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 15ம் தேதி அன்று, இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 290 பேர் வீர மரணம் அடைந்தனர். சீனாவின் தரப்பில் அதிக வீரர்கள் இறந்தனர் என்றாலும், அவர்கள் பல காலங்களுக்கு அதிகார பூர்வ எண்ணிக்கையை வெளியிடவில்லை.
அப்போதிலிந்து இந்திய சீன எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது. சீன ராணுவத்தினர் அவ்வப்போது இந்திய எல்லையில் ஊடுருவும் போக்கு அதிகரித்து வருகிறது.
பிறகு லடாக் (Ladakh) எல்லையில் பாங்சோ ஏரி பகுதியில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைந்த போது, அதற்கும் இந்தியா தக்க பதிலடி கொடுத்தது.
லடாக் எல்லையில் பகுதியில் சீனா ராணுவத்தை தொடர்ந்து குவித்து வருகிறது. இந்தியாவும் எல்லையில் ராணுவத்தை குவித்துள்ளதோடு, கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் பாங்சோ ஏரி, கால்வன் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.பதற்றத்தை தணிக்கும் முயற்சியாக இரு நாடுகளின் ராணுவ உயரதிகாரிகள் பலகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்திய போதிலும் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை.
இந்த நிலையில் நேற்று லடாக்கில் இந்தியாவும் சீனாவும் 9ஆவது சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தின. இந்த பேச்சுவார்த்தையிலும் படைகளை திரும்ப பெறுவதில் இரு தரப்பிற்கும் இடையில் உடன்பாடு எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | இந்திய ராணுவத்தை உளவு பார்க்கும் சீனா...வெளியானது உளவுத் தகவல்..!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR