இந்திய ராணுவத்தை உளவு பார்க்கும் சீனா...வெளியானது உளவுத் தகவல்..!!

லடாக், அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய எல்லை பகுதிகளில் உளவு தகவல்களை சேகரிப்பதில் சீனா ஈடுபட்டுள்ளது என்பதை இந்திய புலனாய்வு அமைப்புகள் கூறுகின்றன.

Written by - ZEE Bureau | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 23, 2021, 02:25 PM IST
  • சீனாவிற்கு எல்லையை விரிவாக்கும் பேராசை தீரவேயில்லை.
  • இந்த விவகாரத்தில் பாதுகாப்பு அமைச்சகம் இதுவரை எந்த தகவலும் வெளியிடவில்லை
  • சீன இராணுவத்தால் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு நடவடிக்கைகளும் இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்திய ராணுவத்தை உளவு பார்க்கும் சீனா...வெளியானது உளவுத் தகவல்..!!

புதுடெல்லி: இந்தியா-சீனா எல்லைப் பிரச்சினை இன்னும் நீட்டிகிறது. சீனாவிற்கு எல்லையை விரிவாக்கும் பேராசை தீரவேயில்லை. இதற்கிடையில், லடாக், அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிமில் எல்லை தகவல்களை சேகரிப்பதில் சீனா ஈடுபட்டுள்ளது என்பதை இந்திய புலனாய்வு அமைப்புகள் கண்டறிந்துள்ளன .சீன இராணுவம் (PLA) எல்லையில் இந்திய ராணுவத்தின் நடவடிக்கைகள் குறித்த தகவல்களை சேகரிப்பதில் ஈடுபட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் பாதுகாப்பு அமைச்சகம் இதுவரை எந்த தகவலும் வெளியிடவில்லை. இந்திய புலனாய்வு அமைப்பு எல்லையில் தீவிரமாக செயல்பட்டு வருவதால், அனைத்து வகையான தகவல்களையும் சேகரித்துள்ளது. சீன இராணுவத்தால் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு நடவடிக்கைகளின் தகவல்களும் இந்திய ராணுவத்தின் (Indian Army) உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளன.

கடந்த 8 மாதங்களாக இந்திய இராணுவத்திற்கும் சீன (China) இராணுவத்திற்கும் இடையே எல்லை தகராறு நீடிக்கிறது என்பது அனைவரும்மறிந்ததே. இந்தியாவின் பகுதியை ஆக்கிரமிக்க சீனா தீவிரமாக முயன்று வருகிறது. ஆனால் இந்திய இராணுவமும் சீன இராணுவத்திற்கு தக்க பதிலடி அளித்து வருகிறது. சீனாவின் ஒவ்வொரு முயற்சியும் இந்திய ராணுவத்தால் முறியடிக்கப்பட்டுள்ளது.

இந்திய இராணுவம் தொழில்நுட்ப உதவியுடன் எல்லையை கண்காணித்துக் கொண்டிருந்தபோது, ​​கிழக்கு லடாக்கிலுள்ள பாங்கோங் த்சோ ஏரியின் தெற்கில் ஜனவரி 8 ஆம் தேதி சீன சிப்பாய் ஒருவர் இந்திய (India) வீரர்களால் கைது செய்யப்பட்டார். ஒரு சீன சிப்பாய் இதுபோன்ற முயற்சி மேற்கொள்வது இது முதல் முறை அல்ல என்று ராணுவ அதிகாரிகள் கூறுகின்றனர்.

சீனாவிற்கு தொடர்ந்து இந்தியா தக்க பதிலடி கொடுத்து வரும் போதிலும், அதன் பேராசை குணம் காரணமாக, எப்பொழுது வாய்ப்பு கிடைக்கும் என தொடர்ந்து எதிர்பார்த்து, சதி வேலையில் ஈடுபட்டு வருகிறது.

ALSO READ | ALSO READ | பரவலாக பாராட்டப்பட்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் உரையை எழுதியது யார் தெரியுமா..!!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News