ரயில் நிலையங்களில் வருகிறது, மண் குவளைகளில் சூடான தேநீர் -நிதின் கட்கரி!

இந்திய ரயில் நிலையங்களில், விரைவில் மண் குவளைகளில் சூடான தேநீர் வழங்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்!

Last Updated : Aug 26, 2019, 12:01 PM IST
ரயில் நிலையங்களில் வருகிறது, மண் குவளைகளில் சூடான தேநீர் -நிதின் கட்கரி! title=

இந்திய ரயில் நிலையங்களில், விரைவில் மண் குவளைகளில் சூடான தேநீர் வழங்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்!

விரைவில் இந்தியா முழுவதும் முக்கியமான ரயில் நிலையங்களில் சூடான தேநீர் மண் குவளைகளில் வழங்கப்படும், அதற்கான வேண்டுகோள் கடிதத்தினை ரயில்வே அமைச்சர் பி.கோயலுக்கு எழுதியுள்ளதாவும் அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இந்த தகவலை புது டெல்லி செய்தியாளர்களிடம் பேசும் பொழுது நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

முதற்கட்டமாக 100 முக்கிய ரயில் நிலையங்களில் தேநீர் மண் குவளையில் மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கும் படியும் அவர் கேட்டுக் கொண்டிருப்பதாக தெரிவித்தார். விமான நிலையங்கள் பேருந்து நிலையங்கள் ஆகியவற்றிலும் மண் குவளைகளில் தேநீர் வழங்கலாம் என கட்கரி பரிந்துரைத்துள்ளார்.

இந்த மாற்றத்தால் கிராம பகுதிகளில் உள்ள மண்பானை தயாரிக்கும் தொழில் முனைவோர் பெரிதும் பயன்பெறுவார்கள் அதேநேரத்தில் சுற்றுச்சூழலும் மேம்படுத்தப்படும் என கட்காரி குறிப்பிட்டுள்ளார். 

அதேவேளையில், பெருமளவில் சுடுமண் குவளைகளை தயாரித்து வழங்க காதி கிராம தொழில் கமிஷன் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். சென்ற ஆண்டு மண்பானைகளை தயாரிப்பதற்கு உதவும் மின்சார சத்திரங்கள் பத்தாயிரம் மண்பானை கலைஞர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த ஆண்டு 25 ஆயிரம் மின்சார சக்கரங்கள் வழங்கப்படும் என காரி கிராமத்தொழில் கமிஷன் தலைவர் வினய் குமார் தெரிவித்துள்ளார்.

ரயில் நிலையங்களில் சுட்ட மண் குவளைகளில் தேநீர் வழங்கும் முறையினை 2004-ஆம் ஆண்டு அப்பொழுது ரயில்வே அமைச்சராக இருந்த லாலு பிரசாத் யாதவ் துவக்கி வைத்தார் தற்பொழுது வாரணாசி மற்றும் ரேபரேலி ரயில் நிலையங்களில் மட்டும் சுடு மண் குவளைகளில் தேநீர் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது பிளாஸ்டிக் பொருட்கள் தடை நாடு முழுவதும் அமுல் படுத்தப்பட்டு வரும் நிலையில், சுட்ட மண் குவளைகள் பெருமளவு தாக்கத்தை உண்டாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News