சூரியன் மறைந்த பின்... சுகர் சாப்பிடாதீங்க - உடல் எடையும் குறையும்... இந்த நன்மைகளும் வரும்!

Health Tips: இரவு நேரங்களில் நீங்கள் சர்க்கரை உணவுகளை சாப்பிடாமல் தவிர்ப்பதன் மூலம் உடல் எடையை குறைப்பது உள்பட இந்த 5 நன்மைகள் உங்களை வந்து சேரும். அவற்றை விரிவாக இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Nov 24, 2024, 06:42 AM IST
  • சர்க்கரை என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று.
  • இருப்பினும் அதிக சர்க்கரையை சாப்பிட்டால் உடல்நலனும் பாதிக்கும்.
  • எனவே, சர்க்கரை எடுத்துக்கொள்வதில் கட்டுப்பாடுகள் நிச்சயம் தேவை.
சூரியன் மறைந்த பின்... சுகர் சாப்பிடாதீங்க - உடல் எடையும் குறையும்... இந்த நன்மைகளும் வரும்! title=

No Sugar Diet In Night, Health Tips: நம் மக்கள் எப்போதும் உணவுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள். எங்கு சென்றாலும் நாக்குக்கு ருசியான உணவுகள் எங்கு கிடைக்கும், காரம் தூக்கலான உணவுகள் எங்கு கிடைக்கும் என பல பேரிடம் விசாரித்து அதை ஒரு கை பார்த்துவிடுவோம். அதுவும் ஹோட்டலுக்கு சென்றால் ஆப்-பாயிலுக்கு எக்ஸ்ட்ரா பெப்பர் சொல்பவர்களையும், டீக்கடைக்கு போனால் டீ, காபியில் எக்ஸ்ட்ரா சுகர் சொல்பவர்களையும் நாம் பார்த்திருப்போம்.

இந்த எக்ஸ்ட்ரா சுகர் என சொல்பவர்களுக்குதான் இந்த தகவல் நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும். சர்க்கரை சேர்த்துக்கொள்வதில் நிச்சயம் ஒரு கட்டுப்பாடு வேண்டும். இதனை நீங்கள் பலரும் சொல்லிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் அதை எப்படி கட்டுப்படுத்த வேண்டும், எப்படி சாப்பிடலாம், எப்படி எடுத்துக்கொள்ளக்கூடாது என்பது குறித்து பலரும் கூறியிருக்க மாட்டார்கள். ஒரே அடியாக சர்க்கரையை நிறுத்துவதும் ஒரு தீர்வு என்றாலும், ஒரு நாளில் குறிப்பிட்ட காலகட்டத்தில் அந்த சர்க்கரை தவிர்த்தாலே உடலுக்கு பெரிய நன்மைகள் பிறக்கும்.

இரவில் இனிப்பு தவிருங்கள்...

எதையும் அளவோடு எடுத்துக்கொள்ளும் வரை அது அமிர்தம்தான் என்பது போல் சர்க்கரையும் நீங்கள் அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டும். அதிக சர்க்கரையை உட்கொண்டால் நீரிழிவு மற்றும் உடல் பருமன் போன்ற பிரச்னைகளும் ஏற்படலாம். அது உடல்நலனை மோசமாக்கலாம். எனவே நீங்கள் சூரியன் மறைந்த பின்னர் சர்க்கரையை எடுத்துக்கொள்ளதாபட்சத்தில் உடலுக்கு பெரிய நன்மைகள் விளையும். அந்த வகையில், இரவில் சர்க்கரை சேர்த்துக்கொள்வது தவிர்த்தால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இங்கு விரிவாக காணலாம்.

மேலும் படிக்க | தொப்பை கொழுப்புக்கு உடனடி தீர்வளிக்கும் சமையலறை மசாலாக்கள்: ட்ரை பண்ணி பாருங்க

ஹார்மோன் சுரப்பது சமநிலைக்கு வரும்

இன்சுலின் மற்றும் கார்டிசோல் போன்ற ஹார்மோன்கள் சுரப்பது சர்க்கரையால் பாதிக்கப்படலாம். இதனால், இரவில் நீங்கள் சர்க்கரையை தவிர்த்தால் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான இந்த ஹார்மோன்கள் சுரக்கும் அளவு சீராக இருக்கும். மன அழுத்தம், ரத்த அழுத்தம், நோய் எதிர்ப்பு சக்தி, வளர்ச்சிதை மாற்றம், தூங்கி எழுந்திருக்கும் இயக்கம் ஆகியவற்றுக்கு கார்டிசோல் ஹார்மோன் மிக முக்கியமான ஒன்றாகும்.

செரிமானம் சரியாக இருக்கும்

இரவில் நீங்கள் சர்க்கரையை தவிர்த்தால் செரிமான அமைப்பு சீராகும். ஏனென்றால் சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகள் இரவில் செரிமானத்தை சற்று கடினமாக்கும். எனவே இரவில் சர்க்கரையை தவிர்ப்பதன் மூலம் உடலுக்கு அழுத்தம் ஏற்படுவதை குறைக்கலாம், தூங்கும்போது நச்சுகள் வெளியேறவும் இது உதவும்.

காலையில் புத்துணர்ச்சி கிடைக்கும்

இரவில் நீங்கள் சர்க்கரை சேர்க்காமல் தூங்குவதன் மூலம் ஆற்றல் சேமிக்கப்படும். சர்க்கரை சாப்பிடுவதால் உடல் ஆற்றல் அதிக செலவாகி நீங்கள் சோர்வாக உணர்வீர்கள். எனவே, இரவில் சர்க்கரை தவிர்த்தால் காலையில் புத்துணர்ச்சி உடன் சுறுசுறுப்பாக உணர்வீர்கள். காலையில் சுறுசுறுப்பாக இருப்பது அந்த மொத்த நாளுக்கும் சிறப்பான ஒரு ஊக்கமாக இருக்கும்.

தூக்கம் சீராகும்

இரவில் சர்க்கரை சேர்க்காமல் இருந்தால் நன்றாக தூக்கம் வரும். ஏனென்றால், சர்க்கரை தான் தூக்கத்தின் எதிரி. இரவில் இனிப்பு சாப்பிடுவதால் ரத்த சர்க்கரை அளவு அதிகரித்து தூங்கும் சுழற்சியை கெடுத்துவிடும். தூங்காமல் இருந்தால் அடுத்த நாள் காலையில் உடல்நலன் சார்ந்தும், மனநலன் சார்ந்தும் பிரச்னைகள் வரலாம். எனவே இரவில் சர்க்கரையை தவிர்ப்பதால் ஆழ்ந்த மற்றும் நிம்மதியான தூக்கத்தை பெறுவீர்கள்.

உடல் எடை குறையும் வாய்ப்பு

உடல் பருமனை குறைக்க நினைப்பவர்களும் சரி, உடல் எடை அதிகரிக்க நினைப்பவர்களும் சரி, சர்க்கரை இரவில் தவிர்ப்பது நல்லது. சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகள் அதிக கலோரிகள் உடையதாக இருக்கும். அதை இரவில் தவிர்த்தால் கொழுப்பு உடலில் சேராது.

(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான மற்றும் ஊடக தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டதாகும். இதை பின்பற்றும் முன் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும் என்பது வாசகர்கள் மறக்க வேண்டும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிசெய்யவில்லை)

மேலும் படிக்க | செரிமானம் முதல் நினைவாற்றல் வரை: இலவங்கப்பட்டை நீர் அளிக்கும் ஆரோக்கிய நன்மைகளின் லிஸ்ட் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News