இந்தாண்டு இறுதிவரை மருத்துவர்கள், செவிலியர்களுக்கு 25% விமான கட்டண சலுகை: இண்டிகோ

மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு 2020 ஆம் ஆண்டு இறுதி வரை விமான கட்டணத்தில் 25% தள்ளுபடி வழங்கப்படும் என்று இண்டிகோ (IndiGo) நிறுவனம் தெரிவித்துள்ளது. 

Last Updated : Jul 2, 2020, 04:12 PM IST
இந்தாண்டு இறுதிவரை மருத்துவர்கள், செவிலியர்களுக்கு 25% விமான கட்டண சலுகை: இண்டிகோ title=

புது டெல்லி: கொரோனா வைரஸ் (CORONAVIRUS) தொற்றுநோய்க்கு எதிரான போரில் போராடி வரும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு 2020 ஆம் ஆண்டு இறுதி வரை விமான கட்டணத்தில் 25% தள்ளுபடி வழங்கப்படும் என்று இண்டிகோ (IndiGo) நிறுவனம் தெரிவித்துள்ளது. 

"செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் தங்கள் அடையாளத்திற்கான சான்றாக செக்-இன் நேரத்தில் செல்லுபடியாகும் மருத்துவமனை அடையாளங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்" என்று விமான நிறுவனம் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

 

 

READ | ஊழியர்களின் ஊதியத்தை பிடிக்க இருப்பதாக இண்டிகோ நிறுவனம் அறிவிப்பு...

 

"இண்டிகோவின் வலைத்தளம் மூலம் முன்பதிவு செய்யும் போது தள்ளுபடி வழங்கப்படும், இது ஜூலை 01, 2020 முதல் டிசம்பர் 31, 2020 வரை விற்பனை மற்றும் பயணத்திற்கு செல்லுபடியாகும்" என்று விமான நிறுவனம் மேலும் கூறியுள்ளது.

 

 

உள்நாட்டு விமானங்களில் பயணிகள் சுமை தொடர்ந்து குறைவாகவே உள்ளது, இதன் நடவடிக்கைகள் மே 25 அன்று இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தொடங்கின.

ஜூலை 1 ம் தேதி 785 விமானங்களில் 71,471 பயணிகள் பயணம் செய்தனர். இதன் மூலம் புதன்கிழமை ஒரு விமானத்தில் சராசரியாக 91 பயணிகள் இருந்தனர் என்று சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி வியாழக்கிழமை ட்விட்டரில் தெரிவித்தார். பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஏ 320 விமானத்தில் சுமார் 180 இருக்கைகள் இருப்பதால், ஜூலை 1 ஆம் தேதி பயணிகளின் 50 சதவீதமாக இருந்தது.

 

READ | கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இண்டிகோ ஊழியர் மரணம்...

 

மேற்கூறிய திட்டத்தை இண்டிகோ (IndiGo) "Tough Cookie" பிரச்சாரம் என்று கூறியுள்ளது.

இதற்கிடையில் திட்டமிடப்பட்ட சர்வதேச பயணிகள் விமானங்கள் இந்தியாவில் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

Trending News