Erode East by election: வாக்காளர்களை சட்டவிரோதமாக அடைத்து வைப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கொட்டகைகளை அகற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது
Erode East Assembly By Election: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
Erode East Election Updates: ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. காங்கிரஸ் கட்சி வேட்பாளா் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து இன்றும் நாளையும் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்.
படம் நடிப்பதைவிட பணம் அதிகமாக தருவதாக கூறி இருப்பார்கள் என்பதாலே அரசியலில் பிரச்சாரம் செய்ய கமலஹாசன் கால் சீட் கொடுத்திருப்பார் என செல்லூர் ராஜூ பேட்டி.
தேர்தல் பணி நேரத்திலும் சட்டமன்ற உறுப்பினரின் உடல் நிலையை நினைவில் வைத்து பாசத்துடன் விசாரித்த முதல்வர் முக ஸ்டாலினின் ஆடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி, ஓட்டுக்கு திமுகவினர் பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள், அது உங்கள் பணம் தான் என கூறியுள்ளார்.
அதிவேகமாக வந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து வித்யா சென்ற மொபட் மீது பயங்கரமாக மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயமடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக அவரது குடும்பத்தினர் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தான் அதிமுகவில் இணைய உள்ளதாக வெளியான தகவல்கள் முற்றிலும் தவறானது என தனியார் தொலைக்காட்சி ஒன்றிடம் சுப்புலட்சுமி ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.
கருமுட்டை விற்பனை விவகாரம் தொடர்பாக ஈரோடு மருத்துவமனைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
எண்ணமங்கலம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் 150க்கும் மேற்பட்டோர் எண்ணமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் இரண்டு அரசு பேருந்துகளைப் சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே இரணியன் நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்த நாடகக் கலைஞர் மேடையிலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு சிறுமியிடம் சினைமுட்டை எடுத்த விவகாரம் முறைகேடாக செயல்பட்ட 4 மருத்துவமனைகளையும் நிரந்திரமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.