பந்திப்போரா பகுதியில் பாதுகாப்பு படியினர் நடத்திய தாக்குதலில் 2 பயங்கரவாதி சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
ஜம்மு மற்றும் காஷ்மீர் பந்திப்போராவின் சுல்லரில் வனப்பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து, ஜம்மு- காஷ்மீரின் பந்திப்போரா பகுதியில் போலீசார், ராணுவம் மற்றும் சிஆர்பிஎப் ஆகிய படை வீரர்கள் சிறப்பு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்த தேடுதலில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தை வீரர்கள் சுற்றி வளைத்தனர். சில மணி நேர சண்டைக்கு பிறகு 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பதுங்கியுள்ள மேலும் பயங்கரவாதிகளுடன் பாதுகாப்பு படையினர் தொடர் துப்பாக்கிச்சண்டை நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து, அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அப்பகுதியில் மேலும் தீவிரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என சந்தேகத்தின் பேரில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
The encounter between security forces and terrorists had started yesterday in the forest area in Sumlar of Bandipora. #JammuAndKashmir https://t.co/DuONqkRrsh
— ANI (@ANI) September 21, 2018