இந்தியர்களின் நினைவிலும், மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர் அப்துல் கலாம் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்!
மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் அவர்களின் 87-வது பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
ராமேஸ்வரம் பள்ளிவாசல் தெருவில் வசிக்கும் ஜெயினாலுபுதீன் - ஆஷியம்மாளுக்கு 7-வது மகனாக பிறந்தவர். தமிழகத்தின் கடைக்கோடி கிராமத்தில் பிறந்து, தனது அசாத்திய திறமையாலும் கடின உழைப்பாலும் ஏவுகணை விஞ்ஞானியாக நாட்டுக்கு அரிய கண்டுபிடிப்புகளை வழங்கி தமிழகத்திற்கு பெருமை சேர்த்தார்.
ஏவுகணை நாயகனின் 87-வது பிறந்தநாளில் அவரை பெருமை படுத்தும் விதமாக பிரதமர் மோடி அவர்கள் தனது ட்விட்டர் பக்கதில் பதிவிட்டுள்ளதாவது...
An exceptional teacher, a wonderful motivator, an outstanding scientist and a great President, Dr. Kalam lives in the hearts and minds of every Indian. Remembering him on his Jayanti. pic.twitter.com/Ko46nUhXx4
— Narendra Modi (@narendramodi) October 15, 2018
"ஒரு சிறந்த ஆசிரியர், அற்புதமான உந்துசக்தி, சிறந்த விஞ்ஞானி மற்றும் மாபெரும் தலைவர் மறைந்த ஜனாதிபதி டாக்டர் கலாம் அவர்கள் ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் நினைவிலும் வாழ்ந்து வருகின்றார். அவரது பிறந்தநாளில் அவரை நினைவுகூற்வோம்" என குறிப்பிட்டுள்ளார்