கர்நாடகாவில் முதல்வராக எடியூரப்பா பதவியேற்ற நிலையில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படாமல் உள்ளது. இந்நிலையில் அடுத்த இரண்டு தினங்களில் எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு டெல்லி சென்ற எடியூரப்பா கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதையடுத்து கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவை வரும் செவ்வாய்கிழமை விரிவாக்கம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Karnataka Chief Minister BS Yediyurappa: Cabinet expansion will be done on August 20, there will be no BJP legislative party meeting, it will be after 3-4 days https://t.co/0KlTNb3LKG
— ANI (@ANI) August 18, 2019
33 பேர் கொண்ட அமைச்சரவையில் முதல் கட்டமாக 15 பேர் அமைச்சர்களாக பதவியேற்பார்கள் எனவும், முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், அசோக், மாதுசாமி, ஈஸ்வரப்பா பசவராஜ் பொம்மை, உமேஷ் கத்தி, ஸ்ரீராமுலு உள்ளிட்டோர் அமைச்சரவையில் இடம்பெறுவார்கள் என கூறப்படுகிறது.
கர்நாடகாவில் அமைச்சர்கள் யாரும் இல்லாததால் முதல்வர் எடியூரப்பா தலைமையில் நடைபெற்ற 3 அமைச்சரவை கூட்டங்களிலும், தலைமை செயலாளர் மற்றும் அதிகாரிகள் மட்டுமே பங்கேற்றனர். இதனால் மழைவெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் நீடிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருந்த நிலையில், கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.