காஷ்மீரில் LeT தீவிரவாதிகள் இருவர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொலை

LeTகமாண்டர்  இஷ்ஃபாக் ரஷீத் கான், அவரது நெருங்கிய கூட்டாளி எய்ஜாஸ் அகமது இருவரும் என்கவுண்டரில் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 25, 2020, 09:08 PM IST
  • J&K என்கவுண்டரில் இரண்டு LeT பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டனர்.
  • அவர்கள் LeT கமாண்டர் இஷ்ஃபாக் ரஷீத் கான் மற்றும் ஏய்ஜாஸ் அகமது என அடையாளம் காணப்பட்டனர்
  • இந்த எண்கவுண்டர் காஷ்மீரில் உள்ள ரன்பீர்கரில் நடந்தது
காஷ்மீரில் LeT தீவிரவாதிகள் இருவர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொலை title=

லஷ்கர்-ஈ-தொய்பா கமாண்டர்  இஷ்ஃபாக் ரஷீத் கான், அவரது நெருங்கிய கூட்டாளி எய்ஜாஸ் அகமது ஜம்மு காஷ்மீரில் நடந்த  என்கவுண்டரில் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்

ஸ்ரீநகர் (SRINAGAR): ஜம்மு-காஷ்மீரின் ரன்பீர்கரில் சனிக்கிழமை (ஜூலை 24, 2020) நடந்த மோதலில் இ லஷ்கர்-ஈ-தைபா (LeT) உயர் மட்ட கமாண்டரும் அவரது நெருங்கிய கூட்டாளியும் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் LeT கமாண்டர் இஷ்ஃபாக் ரஷீத் கான் மற்றும் எய்ஜாஸ் அகமது பட் என அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாதம் தொடர்பான பல சம்பவங்களில் ஈடுபட்டனர்.

கொல்லப்பட்ட இரண்டு பயங்கரவாதிகளில் ஒருவர், ஸ்ரீநகரில் உள்ள சோசித் கிராமத்தில் வசிக்கும் இஷ்பாக் ரஷீத் என்றும்  2018 முதல் மிகவும் தீவிரமாக செயல்பட்டு வரும் லஷ்கர்-ஈ-தொய்பா கமாண்டர்களில் ஒருவராக இருந்தார் என்றும் பல பயங்கரவாத வன்முறை வழக்குகளில் தேடப்பட்டு வந்தார் எனவும் ஜம்மு காஷ்மீர்  காவல்துறை கூறியது. 

ALSO READ | IAF Western Air Command தலைவராக நியமிக்கப்படுகிறார்  ஏர் மார்ஷல் வி.ஆர். சவுத்ரி

எண்கவுன்டரில் கொல்லப்பட்ட மற்றொரு பயங்கரவாதியான ஏய்ஜாஸ் அகமது பட் புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு முக்கியமான லஷ்கர் பயங்கரவாதி என ஜம்மு காஷ்மீர் காவல்துறை கூறியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் காவல்துறை, ராணுவம் மற்றும் மத்திய ரிஸர்வ் காவல் படை (CRPF)ஆகியவற்றின் சிறப்பு நடவடிக்கைக் குழு (SOG) உள்ளிட்ட பாதுகாப்புப் படையினரின் கூட்டுக் குழு, இப்பகுதியில் பயங்கரவாதிகள் இருப்பதைப் பற்றிய உளவு தகவல்களை பெற்ற பின்னர் தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கியது.

சனிக்கிழமையன்று இக்குழு  சந்தேகத்திற்கிடமான இடத்தை சுற்றி வளைத்தபோது, ​​பயங்கரவாதிகள் மறைந்திருந்து கண்மூடித்தனமாக சுட்டனர்.  இதற்கு பாதுகாவல் படையினர் தக்க பதிலடி கொடுத்தனர்.
 இதில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்

ALSO READ | சீரியல் கில்லர்... தந்தையே தனது குழந்தைகளை கொன்ற கொடூரம்..!!!

இதன் மூலம், காஷ்மீரில் இது வரை குறைந்தது 143 பயங்கரவாதிகள் பாதுகாவல் படையினரால் கொல்லப்பட்டுள்ளனர்.

Trending News