Top Selling Car: கடந்த ஜூலை அதிகம் விற்பனையாகி சாதனை படைத்த கார்...!!

மாருதி சுசுகியின் வேகன்ஆர் தொடர்ந்து இரண்டாவது மாதமாக இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார் மாடலாக சாதனை படைத்துள்ளது. ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த காரின் 3389 யூனிட்கள் கூடுதலாக விற்பனையாகியுள்ளன.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 6, 2021, 01:25 PM IST
Top Selling Car: கடந்த ஜூலை அதிகம் விற்பனையாகி சாதனை படைத்த கார்...!! title=

புதுடெல்லி: மாருதி சுசுகியின்  (Maruti Suzuki)  பிரபல ஹேட்ச்பேக் கார் வேகன் ஆர் (Wagon R) தொடர்ந்து இரண்டாவது மாதமாக அதிகம் விற்பனையாகும் காராக சாதனை படைத்துள்ளது. ஜூலை மாதத்தில் மொத்தமாக 22,836 யூனிட் வேகன் ஆர் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அது நம்பர் -1 இடத்தை தக்க வைக்க முடிந்தது.

விற்பனையில் 70% அதிகரிப்பு

கடந்த மாதம் அதாவது ஜூன் -2021 உடன் ஒப்பிடுகையில், மொத்தம் 19,447 யூனிட் வேகன் ஆர் விற்கப்பட்டது.  இந்த முறை கூடுதலாக 3389 யூனிட்கள் விற்கப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி, கடந்த ஆண்டு ஜூலை மாதத்தின் வேகன்ஆர் (Wagon R) விற்பனையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், அது சுமார் 70 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் மொத்தம் 13,513 Wagon R கார்கள் விற்கப்பட்டன.

ALSO READ | வாகனத்தின் மைலேஜை அதிகரிக்க “இவற்றை” இன்றே காரில் இருந்து நீக்கவும்

இரண்டு மாதங்களாக தொடர்ந்து நம்பர் -1

நடுத்தர குடும்பத்திற்கு ஏற்ற காராக விளங்கும் மாருதி Wagon R, விலை மற்றும் பராமரிப்பு ஆகிய இரண்டு அம்சங்களிலும் சிறந்ததாக கருதப்படுகிறது.  டெல்லியில் இதன் எக்ஸ்-ஷோரூம் விலை, மாடலில் வகைகளை பொறுத்து, ரூ. 4,80,500 முதல் ரூ .6,33,000 வரை உள்ளது. 5 இருக்கைகள் கொண்ட காரில் பல சிறப்பு அம்சங்கள் உள்ளன. ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே சப்போர்ட், மேனுவல் ஏசி, நான்கு பவர் விண்டோஸ், கீலெஸ் என்ட்ரி மற்றும் ஸ்டீயரிங் மவுண்டட் ஆடியோ மற்றும் கால் கண்ட்ரோல் கொண்ட 7.0 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. பயணிகளின் பாதுகாப்பிற்காக டிரைவ் சைட் ஏர்பேக்குகள், இபிடியுடன் ஏபிஎஸ் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் போன்ற அம்சங்களும் இந்த மாடலில் உள்ளது. 

ALSO READ | Petrol, Diesel Price: இன்றைய (ஆக்ஸ்ட், 6)  பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News