FIFA 2018: கேரளா ரசிகர் உயிரை பலி வாங்கிய அர்ஜென்டினா அணி!

உலக கோப்பை கால்பந்து போட்டியின் டி பிரிவு ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி தோல்வி அடைந்ததை அடுத்து அர்ஜென்டினா அணியின் ரசிகர் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்!

Last Updated : Jun 24, 2018, 01:39 PM IST
FIFA 2018: கேரளா ரசிகர் உயிரை பலி வாங்கிய அர்ஜென்டினா அணி! title=

உலக கோப்பை கால்பந்து போட்டியின் டி பிரிவு ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி தோல்வி அடைந்ததை அடுத்து அர்ஜென்டினா அணியின் ரசிகர் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்!

உலக கோப்பை கால்பந்து போட்டியின் லீக் ஆட்டத்தில் குரோஷியா அணி 3–0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வெற்றிக்கொண்டது. நிஸ்னி நவ்கோரோட் நகரில் கடந்த 19-ஆம் தேதி இரவு நடந்த இந்த ஆட்டத்தில் 2 முறை சாம்பியன் பட்டம் அர்ஜென்டினா அணி, குரோஷியாவை எதிர்கொண்டது.

ஆட்டத்தின் ஆரம்பம் முதலே அர்ஜென்டினா அணி தடுமாறியது. எதிர்முனையில் குரோஷியா அணியும் தங்கள் பங்கிற்கு எதிர்ப்பு ஆட்டத்தினை கொடுத்தது. எனினும் இரு அணியினருக்கும் நல்ல வாய்ப்புகள் கிடைத்தும், அதனை வீணாக்கினார்கள். முதல் பாதியில் இரு அணியினராலும் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை.

இரண்டாவது பாதியில் ஆக்ரோசமான விளையாட்டை வெளிப்படுத்திய குரோஷியா அணி 3 கோல்களை அடித்தது. ஆட்டத்தின் முடிவில் அர்ஜென்டினா 3-0 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது.

இந்த தோல்வியானது அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த கால்பந்து ரசிகர்களை மட்டுமல்லாமல், அந்த அணியையும், அணித்தலைவர் மெஸ்சியையும் நேசிக்கும் பிற நாட்டு ரசிகர்களையும் வெகுவாக பாதித்துள்ளது. 

இந்நிலையில் கேரளாவின் கோட்டையத்தை சேர்ந்த 30 வயதான டினு அலெக்ஸ் என்பவர், மனம் உடைந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக தனது வீட்டை விட்டு வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை என காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அவரது வீட்டு அறையில் சோதனை செய்ததில் ‘அர்ஜென்டினா அணியின் தோல்வியால் அதிர்ச்சி அடைந்ததாகவும், அதனால் தனது வாழ்க்கையை முடித்து கொள்கிறேன்’ என்று அவர் எழுதிவைத்திருந்த கடிதம் ஒன்று மட்டும் சிக்கியுள்ளது.

மோப்ப நாயின் உதவிகொண்டு தேடுகையில், அது அருகில் இருக்கும் ஆற்றங்கரை வரை மட்டுமே சென்றுள்ளது. இதனால் ஒருவேலை டினு ஆற்றில் குதித்து தற்கொலை செய்துக்கொண்டாரா என்று சந்தேகிக்கப்படுவதாக காவல்துறை தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று காலை அவரது உடல் மேற்குறிப்பிட்ட ஆற்றங்கரையில் பினமாக மீட்டெடுக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்!

Trending News